சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஹெல்தி ஆப்பிள் ஜாம்

உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் உதவியாக இருக்கிறது ஃப்ரூட் ஜாம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் டாக்டரிடம் செல்ல வேண்டியதில்லை என்பது முதுமொழி. ஆப்பிள் சீசனில் மட்டுமே விலை குறைவாக கிடைக்கும். மற்ற காலங்களில் டபுள் மடங்கு விலை எகிரி விடும். விலை ஏறி உள்ள காலங்களில் ஆப்பிளை எப்படி உண்பது என்று தானே கேட்கிறீர்கள்? புரிகிறது.

  • ஆப்பிள் சீசனில் மட்டுமே விலை குறைவாக கிடைக்கும்.
  • மற்ற காலங்களில் டபுள் மடங்கு விலை எகிரி விடும்.
  • தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் டாக்டரிடம் செல்ல வேண்டியதில்லை.

விலை குறைவாக கிடைக்கும் நேரத்தில் அதிகமான ஆப்பிளை வாங்கி அதை ஜாம் ஆக செய்து வைத்துக் கொள்வதால் நீண்ட நாட்களுக்கு வைத்து உபயோகிக்கலாம். இந்த ஜாமை ஆப்பிள் சீசன் முடியும் நேரங்களில் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சப்பாத்தி, பிரட், பூரி போன்ற டிபன் சாப்பிடும் போது இந்த ஜாமை உபயோகப்படுத்தலாம்.

ஹெல்தி ஆப்பிள் ஜாம்

தேவையான பொருட்கள்

தோல் சீவி பொடியாக நறுக்கிய ஆப்பிள் 2 கப், சர்க்கரை ஒரு கப், லெமன் ஒரு ஸ்பூன், தண்ணீர் ஒரு கப்.

செய்முறை விளக்கம்

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்க்கவும். நன்றாக வேக வைத்து மசித்து விடவும். பிறகு இதனுடன் சர்க்கரையைச் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். சர்க்கரை கரைந்து கெட்டியான பதம் வரும் வரை விட்டு, விட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை மீடியமாக வைத்துக் கொள்ளவும்.

ஜாம் பதத்திற்கு வந்ததும் லெமன் சாறு கலந்து கிளறி அடுப்பை அணைக்கவும். நன்றாக ஆறவைத்து ஈரமில்லாத டப்பாவில் அடைத்து டைட்டாக க்ளோஸ் செய்து வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரையும், 15 நாட்களுக்கு வெளியையும் வைத்து சாப்பிடலாம். வாரம் ஒருமுறை சூடு செய்து எடுத்து வைத்தால் வெளியே வைத்து சாப்பிடலாம். பிரிட்ஜில் வைக்க தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *