சமையல் குறிப்புவாழ்க்கை முறை

சன்டே ஸ்பெஷல்.. முட்டை வரைட்டீஸ் – 2..!!

முட்டையை கடையிலிருந்து வாங்கி வந்ததும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து முட்டையை அதில் வைத்தால் மிதக்காமல் உள்ளே இறங்கினால் அது நல்ல முட்டை யாகும். மிதந்தால் அது கெட்டுப் போன முட்டை. அவற்றை உபயோகப்படுத்த கூடாது.

ஏனென்றால் அதில் கெட்டுப் போன ஸ்மல் அடிக்கும். இதைச் செய்த பிறகே ஒவ்வொரு முறையும் முட்டையை சமைக்க வேண்டும்.

முட்டை சாப்ஸ்

தேவையான பொருட்கள் : முட்டை 3, பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், பூண்டு 4 பல், கெட்டியான தேங்காய்ப் பால் கால் கப், உப்பு தேவைக்கு ஏற்ப. ஆயில் ஒரு கரண்டி.

தாளிக்க : பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை.

செய்முறை : முட்டையை வேக வைத்து தோலுரித்து நாம் விரும்பிய வடிவத்தில் துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை தட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு, கிராம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும், தக்காளி பூண்டை சேர்த்து நன்றாக வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அதில் தேங்காய் பாலை ஊற்றவும். உப்பு சேர்த்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கி விடவும்.

சாம்பார் சாதத்துடன் சாப்பிட இது மிக அருமையான சைட் டிஷ் ஆகும்.

முட்டை அவியல்

தேவையான பொருட்கள் : முட்டை 3, மிளகு ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்ப, கறிவேப்பிலை சிறிது.

செய்முறை : முட்டையை தண்ணீரில் வேக வைத்து எடுத்து ஆறிய பின் தோலை உரித்து எடுத்து வைக்கவும். நடுவில் கீறி விடவும். மிளகு, சீரகத்தை, உப்பு சேர்த்து தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதை முட்டையின் நடுவில் வைத்து விடவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு முட்டைகளை போட்டு புரட்டி எடுத்து வைக்கவும். விடாமல் பார்த்து மெதுவாக கிளற வேண்டும்.

முட்டை பொரியல்

செய்முறை : முட்டையை அவித்து தோல் உரித்து பொடிதாக கட் செய்து வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகுத் தூள், சீரகத் தூள் போட்டு கட் செய்த முட்டையை போட்டு பொரித்தெடுத்தால் முட்டை பொரியல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *