சமையல் குறிப்புவாழ்க்கை முறை

மிக்ஸ் கலர்ஃபுல் பொரியல்

மிக்ஸ் கலர்ஃபுல் பொரியல் காய்கறிகளில் காலிஃப்ளவர், பீன்ஸ், கேரட், பரங்கிக்காய், உருளைக்கிழங்கு இவை அனைத்தும் அதிக சத்துக்கள் மிக்கவை. நீர்ச்சத்து, கிழங்கு வகைகள் என அனைத்து சத்தும் இதில் நிறைந்துள்ளன. விரத நாட்களில் இந்த பொரியல் செய்து வைக்கலாம்.

  • மிக்ஸ் கலர்ஃபுல் பொரியல் காய்கறி
  • விரத நாட்களில் இந்த பொரியல் செய்து வைக்கலாம்.
  • அனைத்து காய்கறிகளில் அதிக சத்து மிக்கவை.

மிக்ஸ் பொரியல்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி, பீன்ஸ், பீட்ரூட், கேரட், சௌசௌ, பரங்கிக்காய் தேவைக்கு ஏற்ப. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா அரை ஸ்பூன். மிளகாய் 4, பெருங்காயம் கால் டீஸ்பூன், சீரகம், கால் டீஸ்பூன். எண்ணெய், உப்பு, தண்ணீர், கறிவேப்பிலை, மல்லித்தழை, தேங்காய் துருவல் தேவையான அளவு.

செய்முறை விளக்கம்

கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் எல்லாவற்றையும் எண்ணெயில் சேர்த்து சிவக்க வறுத்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை கழுவி தோலுடன் நறுக்கி வைக்கவும். காலிபிளவரை நறுக்கி சுத்தம் செய்து தண்ணீரில் உப்பு, மஞ்சள் போட்டு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.

பட்டாணி, பீன்ஸ், கேரட், பீட்ரூட், சௌசௌ, பரங்கிக்காய் இவற்றில் தோல் சீவ வேண்டிய காய்கறி சுத்தம் செய்து தோல் சீவி மற்ற காய்கறிகளையும் நறுக்கி எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து ஒவ்வொரு காய்களாக போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வேக விடவும். காய் நன்றாக வெந்ததும் கடைசியாக வறுத்து செய்த பொடி தூவி சிறிது நேரம் கிளறி மல்லித்தழை போட்டு இறக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். கமகமன்னு கலர்ஃபுல் காய்கறி பொரியல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *