சமையல் குறிப்புவாழ்க்கை முறை

சைவ பிரியர்களுக்கு குஷியான நோ எக்.. சாக்லேட் கேக் ரெசிபி

சாக்லேட் கேக் ரெசிபி நோ எக் முட்டை இல்லாமல் ஈஸியாக செய்யலாம். இந்த சாக்லேட் கேக் முட்டைக்கு பதிலாக தயிர் சேர்த்து தயாரிக்கும் கேக்.

இந்த கேக்கை விழாக்கள் நாட்களிலும் முட்டை இல்லாமல் தயிர் சேர்த்து செய்வதால் குஷியாக சாப்பிடலாம். சைவ பிரியர்களுக்கு இது உகந்ததாக சைவ கேக் என்றும் கூறலாம்.

சைவ சாக்லேட் கேக்

தேவையான பொருட்கள் : 2 கப் மைதா மாவு, கால் ஸ்பூன் கொக்கோ தூள், ஒரு கப் தயிர், ஒரு கப் சர்க்கரை, ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், அரை ஸ்பூன் பேக்கிங் சோடா, அரை ஸ்பூன் உப்பு, தேவையான அளவு தண்ணீர், அரை ஸ்பூன் வெனிலா எசன்ஸ், அரை கப் பட்டர், தேவையான அளவு சாக்லேட் சிப்ஸ், உதிர்ந்த பாதாம் தேவையான அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை விளக்கம் : பேக்கிங் செய்யப்படும் பாத்திரத்தில் சிறிது பட்டரை அல்லது எண்ணை விட்டு தடவி உட்பகுதி முழுவதுமாக தடவவும். சிறிதளவு மைதா கிரீஸ் மேலே சிறிது தூவி விடுங்கள்.

இன்னொரு பாத்திரத்தில் தயிருடன் நைசாக அரைத்த சர்க்கரை சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி வைக்கவும். நன்றாக கலக்கிய பிறகு மைதா, கோகோ பவுடர் ஆகியவற்றை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

சிறிது பட்டர் அல்லது எண்ணெய் சேர்த்து இந்தக் கலவையை எண்ணெய் முழுவதும் உறிஞ்சும் வரை கிளற வேண்டும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கிய பிறகு பேக் செய்யும் கிரீஸ் பட்டர் பாத்திரத்தில் ஊற்றி சமமாக பரப்பி வைக்கவும்.

சமமாக பரவிய பிறகு இந்த கலவையின் மேலே சாக்கோ சிப்ஸ் மற்றும் நறுக்கிய பாதாம் துருவல் தூவி. ஓவனை 10 நிமிடங்கள் சூடாக்கிய பிறகு. இந்த ட்ரேயை வைத்து 40 நிமிடங்கள் மிதமான டிகிரியில் வைத்து வேக விடவும்.

பிறகு ட்ரேயை எடுத்தால் மிருதுவாக உப்பி வந்திருக்கும். ஆற வைத்து கட் செய்து பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *