ஆன்மிகம்ஆலோசனை

தீர்க்காயுள் தரும் தன்வந்திரி போற்றி

மருத்துவ அரசனாக திகழும் தன்வந்திரி பகவானை போற்றிப் பாட அனைத்து விதமான நோய்களும் அண்டாமல் காத்தருள்வார். ஆதிகாலம் தொட்டே மருத்துவ வசதிகள் கிடையாது. ஒவ்வொரு வியாதிகளுக்கும் ஒவ்வொரு மருந்துகள் இருந்தன. நாம் உண்ணும் உணவை உடலுக்கு மருந்தாக இருக்க வேண்டும் என்று தன்வந்திரி பகவானை வேண்டி மருந்தை உண்ணுவார்கள். அப்படி உண்ணும் மருந்திற்கு உடனடியாக பலன் கிடைத்தது.

  • ஒவ்வொரு வியாதிகளுக்கும் ஒவ்வொரு மருந்துகள் இருந்தன.
  • தன்வந்திரி பகவானை வேண்டி மருந்தை உண்ணுவார்கள்.
  • நாம் உண்ணும் உணவை உடலுக்கு மருந்தாக இருக்க வேண்டும்.

மருத்துவ அரசனாக திகழும் தன்வந்திரி பகவானை போற்றிப் பாட அனைத்து விதமான நோய்களும் அண்டாமல் காத்தருள்வார். வியாழன், செவ்வாய் கிழமைகளில் துளசி மாலை அணிவித்து இவரை வழிபட கைமேல் பலன் கிடைக்கும்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ.

108 தன்வந்திரி போற்றி

  1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
  2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
  3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
  4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
  5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
  6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
  7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
  8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி
  9. ஓம் அமரர் தெய்வமே போற்றி
  10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
  11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி
  12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி
  13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
  14. ஓம் அழிவற்றவரே போற்றி
  15. ஓம் அழகுடையோனே போற்றி
  16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
  17. ஓம் அமைதியின் வடிவே போற்றி
  18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
  19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
  20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
  21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
  22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
  23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி

மேலும் படிக்க : சுபமுகூர்த்தம் நிறைந்த குருவாரம்

  1. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
  2. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
  3. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
  4. ஓம் ஆனந்த ரூபனே போற்றி
  5. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
  6. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
  7. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி
  8. ஓம் உலக ரட்சகரே போற்றி
  9. ஓம் உலக நாதனே போற்றி
  10. ஓம் உலக சஞ்சாரியே போற்றி
  11. ஓம் உலகாள்பவரே போற்றி
  12. ஓம் உலகம் காப்பவரே போற்றி
  13. ஓம் உயிர்களின் காவலரே போற்றி
  14. ஓம் உயிர் தருபவரே போற்றி
  15. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
  16. ஓம் உண்மை சாதுவே போற்றி
  17. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
  18. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
  19. ஓம் எழிலனே போற்றி
  20. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
  21. ஓம் எல்லாம் தருபவரே போற்றி
  22. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி
  23. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
  24. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
  25. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
  26. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
  27. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
  28. ஓம் கருணைக் கடலே போற்றி
  29. ஓம் கருணை அமுதமே போற்றி
  30. ஓம் கருணா கரனே போற்றி
  31. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
  32. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
  33. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
  34. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
  35. ஓம் குருவே போற்றி
  36. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
  37. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி
  38. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
  39. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
  40. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
  41. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
  42. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
  43. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
  44. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
  45. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
  46. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
  47. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
  48. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
  49. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
  50. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
  51. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
  52. ஓம் சித்தமருந்தே போற்றி
  53. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி
  54. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
  55. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி
  56. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
  57. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
  58. ஓம் தசாவதாரமே போற்றி
  59. ஓம் தீரரே போற்றி
  60. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
  61. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
  62. ஓம் தேகபலம் தருபவரே போற்றி
  63. ஓம் தேவாதி தேவரே போற்றி
  64. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
  65. ஓம் தேவாமிர்தமே போற்றி
  66. ஓம் தேனாமிர்தமே போற்றி
  67. ஓம் பகலவனே போற்றி
  68. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
  69. ஓம் பக்திமயமானவரே போற்றி
  70. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
  71. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
  72. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
  73. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
  74. ஓம் புருளஷாத்தமனே போற்றி
  75. ஓம் புவனம் காப்பவரே போற்றி
  76. ஓம் புண்ணிய புருஷரே போற்றி
  77. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
  78. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
  79. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
  80. ஓம் மகா பண்டிதரே போற்றி
  81. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
  82. ஓம் முக்தி தரும் குருவே போற்றி
  83. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
  84. ஓம் சக்தி தருபவரே போற்றி
  85. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!

அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.

மேலும் படிக்க : பஞ்சமியன்று பூஜிக்கும் வாராஹியின் சக்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *