செய்திகள்தமிழகம்தேசியம்

முதல் முறை இந்தியா நாட்டு பிரதமர் மோடி மற்றும் விஜய் சந்திப்பு

தமிழகத்தில் முதல்முறையாக ஜோசப் விஜய் பதவி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அதிகாரம் பூர்வ அரசு முறை பயணமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் மே 172026, இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக மாநிலத்தின் நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை கொண்ட மனுவை அளித்துள்ளார்

மத்திய அமைச்சர்களின் சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 27) சந்தித்துப் பேசினார். இதை தொடர்ந்து,மாநிலத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, மாநில நிதிப் பகிர்வு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்

ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்

முதலமைச்சர் பிரதமர் கோரிக்கைகள்

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியுடன் விஜயின் முதல் டெல்லி பயணமாக அமைந்துள்ளது, மேலும் பிரதமர் நெதர்லாந்து பயணத்தின் போது,ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

  • தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்திலேயேதேசிய பாடல் எப்போதும் பாடப்பட்டு வருகிறது ஆனால் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற வேண்டும் என உள்துறை அமைச்சகத்திற்கு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்
  • காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது.மேகதாது திட்டத்தை தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல்கள் இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என்று ஜல்சக்தி அமைச்சகம், மத்திய நீர்வள ஆணையத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டு உள்ளார்.
  • தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், மிக கவலைக்கிடமான அளவுக்கு அதிகரித்துள்ளது, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழகத்தில் வான்வளி அமைப்பு (CABS)கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை மனு அளித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *