சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

மனோஜின் பித்தலாட்டம் தெரிய போகிறது! விஜயா vs ரோஹிணி

credits -google

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் கனகாவுடன் பார்க் சென்று பார்வதியிடம் மாட்டி கொள்கிறார், ரோகினியின் குழந்தைக்கு மனோஜ் தான் அப்பா என ரோஹிணி லீகல் டாக்குமெண்டில் எழுதியிருக்கிறார் என முத்து சொல்ல, அதிலிருந்து தப்பிக்க விஜயா ஒரு ஐடியா சொல்கிறார்

பார்வதியிடம் மாட்டும் மனோஜ்

மனோஜின் மாமியார் தேவிகா, கனகாவை பார்க் கூட்டி போக சொல்லிவிட்டார், மனோஜும் கனகாவும் பார்க்கில் அமர்ந்து போட்டோ எடுத்து கொண்டிருக்கும்போது, மனோஜ் சிவனையும் பார்வதியையும் பார்க்கிறார், எங்கே மாட்டிக்க போறமோ?? என்ற பயத்தில் மரத்திற்கு பின்னால் மனோஜும் கனகாவும் ஒளிந்து கொள்ள, சரியாக பார்வதியும் அங்கேயே வந்து நிற்கிறார்.

இப்பொழுது கை காட்ட நுமராலாஜிஸ்ட் இல்லையே என யோசிக்க, உடனே போன் செய்து, அவரை வரவைக்கிறார், அவரும் ஒவ்வொரு தடவை மனோஜ் மாட்டும் போதும் காப்பாற்றுகிறார், அவரும் வந்த உடனே அந்த பார்க் விட்டே பார்வதி மற்றும் சிவனை வெளியே போக வைத்து விட்டார்

credits -google

மனோஜ் தான் அப்பா

மனோஜ் வீட்டிற்கு வந்த உடனே மற்றோரு பிரச்னையும் கூடவே வருகிறது, முத்து விஜயாவிடம் மனோஜ் பற்றி பேசிகொண்டிருக்கிறார்,மனோஜிற்கு இந்த நாளே அமோகம் தான்!

ரோஹிணி ஹாஸ்பிடல் டாக்குமெண்ட் எல்லாம் மனோஜ் தான் அப்பானு தெளிவா கொடுத்து இருக்காங்க! அது லீகல் டாக்குமெண்ட் பர்த் செர்டிபிகேட் ல கூட மனோஜ் பேரு தான் அப்பான்னு வரும் னு சொல்கிறார்,

விஜயாவை பொறுத்த வரை மனோஜ் எந்த பொய்யும் சொல்லல, ரோஹிணி தான் “பொய்க்காரி “. அதனால அவ பொய் சொல்றா, ஹாஸ்பிடல் டாக்குமெண்ட் ல எல்லாம் உன் பேர அழுச்சுட்டு வந்துருனு மனோஜ்கிட்ட சொல்லிட்டு இருக்காரு, அதெல்லாம் பண்ண முடியாதுனு சொன்னாலும் விஜயாவிற்கு புரியல

உடனே விஜயா ஒரு பிளான் பண்றாங்க, “அந்த டாக்குமெண்ட் ல தானா அழிக்க முடியாது, மனோஜ் பேர மாதிட்டா எப்படி! இவனுக்கு வேற எதாவது பேர் வச்சுருவோம், இவன் பேரு மனோஜ் இல்லனு ஊரு முழுக்க சொல்லுவோம்னு ரொம்ப அறிவாளியா பேசிகிட்டு இருக்காங்க!

இந்த சூப்பர் ஐடியாவை கேட்டு, முத்து, ரவி, ஸ்ருதி மூன்று பேரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறார்கள்.

ரோஹிணி போடும் கண்டிஷன்

மனோஜின் ஷோரூமிற்கு ரோஹிணி வருகிறார், உன்னுடன் பர்சனளாக பேச வேண்டும் என்று சொல்கிறார், ஆனால் மனோஜ் நமக்குள் என்ன பர்சனல் இருக்கு?? என கேள்வி கேட்க, ரோகினிக்கு கோவம் வந்துவிட்டது

உனக்கு குழந்தை மேல் கொஞ்சம் கூட அக்கறையும் இல்லை?? பாசமும் இல்லையா?? நார்மல் டெலிவரிக்காக 1 லட்சம் பேக்கேஜ் கட்டி இருக்கிறேன், ஒவ்வொரு மாதமும் 3 வது வாரம் செக்அப் போகவேண்டும், நீ தான் எனை அழைத்து செல்ல வேண்டும் என ரோஹிணி கோபத்துடன் கூறிவிட்டார்.

இனி மனோஜ் எப்படி இதை சமாளிக்க போகிறார்?? கனகாவின் அம்மாவிற்கு என்ன பதில் சொல்ல போகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *