பதட்டமான சூழலில் தஞ்சை மக்கள் -இருதரப்பினர் மோதல்-இது தவெக அரசின் திசை திருப்பும் முயற்சி
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசமாக பேசியும், திமுக நிர்வாகிகள் திரிஷா என்று கூச்சலிட்டதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும், பெண்களை இவ்வாறு இழிவு படுத்திக்கிறார் என்றும் தவெக மகளிர் அணி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் கொடுக்க பட்டுள்ளது.
credits google

இதை தொடர்ந்து நேற்று சென்னையில் உதயநிதி கைது செய்ய பட்டார்,கைது செய்யப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் சாலையில் மறியல் நடத்தினர்,பேரணி நடத்தினர், போராட்டம் நடத்தபட்டது
தவெக மகளிர் அணி தரப்பினர் ஒரு பக்கம் ஆரப்பாட்டம், மற்றோரு பக்கம் முதல்வர் உருவ சிலை எரிப்பு என்று தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது, போராட்டதால் போக்குவரத்து பாதிப்பும் பதட்டமும் அதிகரிக்கிறது.
திமுக தவெக இருத்தரப்பினரும் கல் வீச்சு, செருப்பு வீசுதல் என முறையற்ற போராட்டத்தில் ஈடப்பட்டதால் பொதுமக்கள் பதட்டத்திற்கு உள்ளாகினர்
தி.மு.க-வினர் முதல்வர் விஜய்யின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். மேலும், அவரது உருவப்படத்தை காலணியால் அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இது தெரிந்து தவெக வினரும் அதே இடத்திற்கு வர,போலீஸார் இரு தரப்பினருக்கும் இடையே தடுப்புகளை அமைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
தஞ்சை மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.திமுகவினர் மீண்டும் தமிழக முதல்வரின் அரசையும், காவல்துறையையும் எதிர்த்து முழக்கமிட்டனர்
காவல்நிலையம் மாறுதல்
உதயநிதி ஸ்டாலினை கைது செய்தபின்பு வழக்கு விசாரணையில் உள்ள தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் போதிய இடமில்லாததால்,மேலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனை செய்ய கூடுமென்று,மீண்டும் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு உதயநிதி ஸ்டாலினை அழைத்துச் சென்றனர்.
அங்கு அழைத்த சென்று பின்பும் உதயநிதி ஸ்டாலின் வழக்கறிஞர் வந்தால் மட்டுமே விசாரணைக்கு வருவேன் என்று கூறி வாகனத்தை விட்டு இறங்கமால் தாமதம் செய்து கொண்டிருந்தார்
தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனம் முன்னிலையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் விசாரணை நடத்தினார்,சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது, போலீஸாரின் கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்,
ஜாமீனில் இருந்து வெளிவந்த உதயநிதி ஸ்டாலின் பத்திரிக்கையாலர்கள் சந்தித்து பேசியுள்ளார், “நான் எந்த தவறான எண்ணத்திலும் பேசவில்லை. பெண்களை தவறான நோக்கத்தில் பேசவேண்டும் என நினைக்கமாட்டேன். என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்கென குடும்பம் இருக்கிறது” என கூறி தவெக அரசு திசை திருப்ப இவ்வாறு செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்

