அக்டோபர் 3 நிகழ்ந்த முக்கிய மாநில மற்றும் தேசிய நிகழ்வுகள்
வெற்றி பயணம் திட்டம் விரிவாக்கம்
தமிழக அரசு தனது முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான ‘வெற்றி பயணம் திட்டத்தின்’ விரிவாக்கப்பட்ட சேவையைச் சென்னையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தது.
முன்பு ‘விடியல் பயணம் திட்டம்’ மூலம் சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டுமே இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் பல பேருந்து சேவைகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பயணத்தின் போது ஆதார் அட்டை அல்லது ஏதேனும் அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து இலவச ‘பூஜ்ஜியக் கட்டண’ (Zero-fare) டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம்
அக்டோபர் 6-ல் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்
காதி தள்ளுபடி விற்பனை
காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் சிறப்பு காதி தள்ளுபடி விற்பனையைத் தமிழக ஆளுநர் தொடங்கி வைத்தார்.
தேசிய செய்திகள்
5வது கவுடில்யா பொருளாதார உச்சி மாநாடு
5வது கவுடில்யா பொருளாதார உச்சி மாநாடு (5th Kautilya Economic Conclave – KEC 2026) அக்டோபர் 3 முதல் 5, 2026 வரை புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிறுவனம் (IEG) மற்றும் மத்திய நிதியமைச்சகம் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.
இதில் புவிசார் அரசியல் பதற்றங்கள், உலக வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளும் உத்திகள்,செயற்கை நுண்ணறிவு (AI), தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வளர்ச்சி,இந்தியாவில் நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அதிகரித்தல் மற்றும் உள்நாட்டு மூலதனத்தைத் திரட்டுதல்,நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கைகள் பற்றி விவாதிக்க பட்டன.
RoDTEP திட்டம் நீட்டிப்பு
ஏற்றுமதியாளர்களுக்கான வரி விலக்கு அளிக்கும் RoDTEP திட்டத்தை டிசம்பர் 31, 2026 வரை நீட்டித்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது,ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேச சந்தையில் நிலையான தன்மையை வழங்கும் நோக்கில் இத்திட்டம் செப்டம்பர் 30, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ), ஏற்றுமதி சார்ந்த பிரிவுகள் (EOU) மற்றும் அட்வான்ஸ் ஆதரவு திட்டங்களின் கீழ் வரும் ஏற்றுமதிகளுக்கும் இச்சலுகைகள் தொடர்ந்து பொருந்தும்.
மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் திரும்பப் பெற முடியாத வரிகள் (எ.கா. எரிபொருள் மீதான VAT, மின்சாரக் கட்டணம்) திரும்ப வழங்கப்படுகின்றன.
கடல்சார் எண்ணெய் ஆய்வு
இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுகளுக்காக மத்திய அரசு ₹84,084 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தது.
இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) ஆழ்கடல் மற்றும் மிக ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள முக்கிய திட்டம் ‘சமுத்திர மந்தன்’ (Samudra Manthan – National Offshore Exploration Scheme) ஆகும்.
மத்திய அரசு இத்திட்டத்திற்காக ₹84,084 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது,நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைத்து energy self-reliance (ஆற்றல் தன்னாட்சி) எய்துவது இதன் நோக்கமாகும்.
ஆழ்கடல் துளையிடும் பணிகளில் உள்ள அதிக ஆபத்து மற்றும் செலவைக் குறைக்க, மத்திய அரசு நிறுவனங்களின் ஆய்வுக் கிணறுகளுக்கு 50% வரை (அதிகபட்சமாக ₹675 கோடி வரை) மானிய நிதி வழங்குகிறது..

