இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -02.10.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 01.10.2026
பரபாவ வருடம் புரட்டாசி 15, வெள்ளிக்கிழமை, October 02, 2026 பஞ்சாங்கம் –
திதி : 10:15 AM வரை சஷ்டி பின்னர் சப்தமி
நட்சத்திரம் : மிருகசீரிடம் 02:54 AM வரை பிறகு திருவாதிரை
யோகம் : வ்யதீபாதம் 06:17 PM வரை, அதன் பின் வரியான்
கரணம் : வனசை 10:15 AM வரை பிறகு பத்திரை 09:07 PM வரை பிறகு பவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : காலை 03.00 முதல் 04.30 மணி வரை
குளிகை: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் -02.10.26
மேஷம் -லாபம் கூடும்
ரிஷபம் -அச்சம் ஏற்படும்
மிதுனம் -எதிர்ப்பு உண்டாகும்
கடகம் -பணவரவு அதிகரிக்கும்
சிம்மம் -பயம் உண்டாகும்
கன்னி -நன்மை ஏற்படும்
துலாம்-ஆதாயம் உண்டாகும்
விருச்சிகம்-அலைச்சல் அதிகரிக்கும்
தனுசு -ஆரோக்கியம் தேறும்
மகரம் -வெற்றி நிச்சயம்
கும்பம் -கவலை உண்டாகும்
மீனம் -காரிய தாமதம்
காந்தி ஜெயந்தி
காந்தியடிகள் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி குஜராத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்தார்.
காந்தியடிகள் உலகிற்கு உணர்த்திய சத்தியாகிரகம் மற்றும் அஹிம்சை வழியைப் போற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை (UN) அக்டோபர் 2-ஆம் தேதியை “சர்வதேச அஹிம்சை தினம்” (International Day of Non-Violence) ஆக அறிவித்துக் கொண்டாடுகிறது.
இந்தியாவில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தைப் போல காந்தி ஜெயந்தியும் ஒரு முக்கிய அரசு விடுமுறை நாளாகும்.
புதுடெல்லியில் உள்ள காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட்டில் (Raj Ghat) நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துவர்.

