கல்விடிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

டின்பிஸ்சி மற்றும் யுபிஸ்சி போட்டி தேர்வுகளுக்கான அன்றாட தகவல் 27.11.2026

ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாள் தந்தைவழி விடுப்பு

திருமணமான ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய தந்தைவழி விடுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்போ அல்லது பிறந்த ஆறு மாதங்களுக்குள்ளோ இந்த விடுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

​நிபந்தனை: அதிகபட்சமாக இரண்டு உயிருள்ள குழந்தைகள் வரை மட்டுமே இந்த விடுப்பு சலுகை பொருந்தும்.

ஏற்கனவே பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு (Maternity Leave) 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆண் ஊழியர்களும் குழந்தைப் பராமரிப்பில் பங்கேற்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு நிர்வாகம், சமூக நலத் திட்டங்கள் பாடப்பகுதியில் கேட்கப்படலாம்.

500 பால் பண்ணைகளுக்கு மானியம்

தலா ஐந்து கறவைப் பசுக்கள் அல்லது எருமைகள் கொண்ட 500 நடுத்தரப் பால் பண்ணைகளுக்கு ₹5 கோடி ஒதுக்கீட்டில் 25% மூலதன மானியம் வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

யூரியா உற்பத்தியில் தன்னிறைவு (NIPU-2026)

யூரியா உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நோக்கில் புதிய யூரியா கொள்கை (NIPU-2026) மற்றும் ஆறு புதிய ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான விவாதங்கள் போட்டித் தேர்வுகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தியாவின் ஆண்டு யூரியா தேவை சுமார் 400 லட்சம் மெட்ரிக் டன் (400 LMT) ஆக உள்ளது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி சுமார் 293.30 LMT மட்டுமே உள்ளதால், மீதமுள்ள தேவைக்கு இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இப்புதிய 6 ஆலைகள் மூலம் தலா 12.7 LMT வீதம் மொத்தம் 76.2 LMT ஆண்டு உற்பத்தித் திறன் உருவாக்கப்படும்.

ஒவ்வொரு ஆலையும் சுமார் ₹9,000 கோடி மதிப்பீட்டில், ஏற்கனவே உள்ள தொழிற்சாலை வளாகங்களில் விரிவாக்க அல்லது புதுப்பித்தல் திட்டங்களாக (பழுப்புநிலத் திட்டங்கள்) அமைக்கப்படுகின்றன. இதனால் ஒரு ஆலைக்கு ஆண்டுக்குச் சுமார் ₹225 கோடி வரை செலவு சேமிக்கப்படும்.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆலையும் உள்ளது

  • MFL (மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ்) – சென்னை தமிழ்நாடு
  • NFL – நங்கல் பஞ்சாப்
  • KFL (கிரிப்கோ) – ஷாஜகான்பூர் உத்தரப் பிரதேசம்
  • Matix – பனாகர் மேற்கு வங்காளம்
  • CFCL – கடேபன் ராஜஸ்தான்
  • IIPL – ஜகதீஷ்பூர் உத்தரப் பிரதேசம

உணவு தானிய உற்பத்தியில் இந்தியா சாதனை

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்ட இறுதி மதிப்பீட்டின்படி, 2025–26 ஆம் ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 378.538 மில்லியன் டன்களாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

அரிசி (155.154 மில்லியன் டன்), பருப்பு வகைகள், சணல், சிறுதானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முதலிடத்திலும்,

கோதுமை (122.064 மில்லியன் டன்) மற்றும் பருத்தி உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

மத்திய அமைச்சரவையின் முக்கிய ஒப்புதல்கள்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் ₹11,000 கோடி மதிப்பீட்டில் கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு உபகரண (CIE) உற்பத்திச் சூழலமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறைத் திட்டங்கள் நீட்டிப்பு

அஞ்சல் செயல்பாடுகள் திட்டம் மற்றும் எஸ்டேட் மேலாண்மைத் திட்டம் ஆகிய இரு மத்தியத் துறைத் திட்டங்களை 2026–27 முதல் 2030–31 வரை தொடர ₹2,632 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சுவயம்சித்தா தேசிய மாநாடு 2026 (Swayamsiddha National Conference):

பெண்களின் பொருளாதாரத் தற்சார்பு மற்றும் தலைமைத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நாக்பூரில் நடைபெற்ற இம்மாநாட்டைக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

புதிய பல்லி இனங்கள் கண்டுபிடிப்பு

மேகாலயாவின் குகைகளில் வாழும் இரண்டு புதிய வளைந்த விரல் கொண்ட பல்லி (Bent-toed geckos) இனங்கள் (Cyrtodactylus bossmit மற்றும் Cyrtodactylus kremicola) கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *