செய்திகள்தமிழகம்விழிப்புணர்வு

தொடர்ந்து கொண்டே இருக்கும் பாலியல் வன்கொடுமை – சூலூர் சிறுமி படுகொலை – தவெக ஆட்சியிலும் இப்படி தானா?? கொந்தளிக்கும் பொதுமக்கள்

நேற்று சூலூரில் கடைக்கு சென்ற 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்து குளத்தில் வீசி சென்ற சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது, குழந்தைக்கூட இந்த நிலையா?? என்று பொதுமக்கள் கொந்தளித்து கொண்டு இருக்கின்றனர், தவெக ஆட்சி அமைக்க பட்ட போது கூறிய ” சிங்கப்பெண் சிறப்பு படை “எங்கே என கூறி பலரும் கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார்கள்

10 வயது சிறுமி கடத்தல்

நேற்று வீட்டில் இருந்து மாலை 5 மணிக்கு கடைக்கு மிட்டாய் வாங்க சென்று சிறுமி வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் உறவினர்கள் தேடி பார்த்து விட்டு காவல் துறையிடம் வழக்குபதிவு செய்து தேடிவந்துள்ளனர், போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர் இதை தொடர்ந்து 2 km தொலைவில் உள்ள குளத்தில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது,

குற்றவாளிகள் கைது

கடைக்கு சென்ற சிறுமியை அழைத்து சென்றவர் அருகாமையில் வசித்த நபர் என்று போலீசும் பெற்றோரும் cctv காட்சிகளை பார்த்த பிறகு உறுதி செய்தனர்,சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த கொலை சம்பவமானது தமிழகத்தை உளுக்கும் அளவிற்கு, மனித நேயமற்ற செயலாக மாறியுள்ளது

கார்த்திக் என்ற குற்றவாளியும் குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த மோகன்ராஜ் என்பவரையும் 5 தனிப்படை அமைத்து, 250 cctv கேமராக்களால் ஆய்வு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்

அழுது துடிக்கும் பெற்றோர்கள்

இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டேவருகிறது என்பது பெற்றோர்களிடத்தில் கவலைக்கு உரியதாக மாறியுள்ளது, விசாரணை நடத்திய போது இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர், இவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த பட்டுள்ளது

கண்ணுக்கு கண்ணாக வளர்த்த பிள்ளை சடலமாக இவ்வளவு சித்ரவதை அனுபவித்து படுகொலை செய்ய பட்டது சட்ட ஒழுங்கு சரி வர இயங்கவில்லை என்பதற்கான எடுத்து காட்டக மக்களிடத்தில் பார்க்க படுகிறது

சட்ட ஒழுங்கு எங்கே??

இதை தொடர்ந்து சிறுமி கொலை வழக்கிற்கு தவெக ஆட்சியில் சட்ட ஒழுங்கு இன்னும் மெத்தனமாக செயல்படுகிறது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், தவெக அரசானது சட்ட ஒழுங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் இனிமேல் இது போன்று நடக்காமல் இருப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *