Jallikattu bullsசினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

ரோகினியின் கடைசி அத்தியாயம் – திருவிழா போல் கொண்டாடும் விஜயா

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜோ ரோகிணிக்கு தரவேண்டிய ஐந்து லட்சத்திற்கு ஏதேதோ தில்லு முல்லு வேலையெல்லாம் செய்து,பிடிக்காத பெண்ணை திருமணம் எல்லாம் செய்து பணத்தை புரட்டி விட்டான், தற்போது அது விஜயாவிற்கு ரொம்ப பெரிய ஒரு விஷயமாக தெரிகிறது இனி உடனே ரோகினி இடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டு மனோஜருக்கு இரண்டாவது திருமணம் பணக்கார பெண்ணை பார்த்து திருமணம் செய்ய ஆசையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள், மனோஜோ எந்தவித வருத்தமும் இல்லாமல் ரோகனியிடம் விவாகரத்து கேட்கிறான் என்ன நடக்கிறது விரிவாக பார்க்கலாம்

credit -google

பணத்தைப் புரட்டிய மனோஜ் ஆச்சரியத்தில் விஜயா சந்தேகத்தில் முத்து

மனோஜ் கனகாவை திருமணம் செய்து மாமியாரிடமிருந்து பத்து லட்சத்தை வாங்கிக்கொண்டு ஐந்து லட்சத்தை மட்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விஜயாவிடம் கொடுக்கிறான், விஜயா விற்கு தலைகால் புரியவில்லை “என் பையன் 5 லட்சத்தை புரட்டி விட்டான் “அது அவனுடைய புத்திசாலித்தனம் தான் என்று மனோஜை பாராட்டிக் கொண்டிருக்கிறாள்

credits -google

ஆனால் அந்த வீட்டிலிருக்கும் விஜயாவை தவிர வேறு யாருக்குமே மனோஜ் மீது நம்பிக்கை இல்லை இந்த ஐந்து லட்சம் பணத்திற்கு பின்னால் வேறு ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது கடைசியில் நம்மளை தான் சிக்க வைக்கப் போகிறான் என்று முத்து சந்தேகப்படுகிறான், கண்டிப்பாக உழைத்து சம்பாதித்து இருக்க மாட்டான் ஏதோ சந்தேகம் இருக்கிறது எனவும் சொல்கிறான்

ஆனால் அதை எதையுமே பொருட்படுத்தாமல் விஜயா உடனே மனோஜின் கல்யாணத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாள், மனோஜிடம் விஜயா இந்த 5 லட்சம் பணத்தை ரோகிணியின் முகத்திலேயே வீசி விட்டு அவளிடம் விவாகரத்து கையெழுத்தை வாங்கி விடு என்று கூறுகிறாள்

கையெழுத்து போட்டுவிட்டு போய்க்கிட்டே இரு

மனோஜூம் ரொம்ப நேரமா யோசித்துக் கொண்டே இருந்தான் பிறகு உடனே ரோகிணிக்கு போன் செய்து,நீ கேட்ட ஐந்து லட்சம் ரூபாய் தயாராக இருக்கிறது, நாளைக்கு காலையில் 10:00 மணிக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு உன் பணத்தை எடுத்து விட்டு போய்க்கிட்டே இரு! என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டான்

நொறுங்கிப் போகும் ரோகிணி

ஏற்கனவே ரோகிணி தான் ஐந்து லட்சம் கொடுத்தால் விவாகரத்து கொடுத்து விடுவேன் என்று சொன்னால் ஆனால் இப்பொழுதும் மனோஜை மறக்க முடியாமல் ரோகிணியின் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது, மனோஜ் சொன்னா இந்த வார்த்தையால் ரோகிணி மனம் உடைந்து போனால் இனி நமக்குள் எல்லாமும் முடிந்து விட்டதா?? என்ற ஒரு கேள்வியும் கேட்டாள்,இந்த கேள்விக்கு கூட பதில் சொல்லாமல்” நாளையோட எல்லாமே முடிந்து விட்டது நீ எனக்காக காத்திருக்க வேண்டாம் “என்று மனோஜூம் பதில் சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டான்

ரோகிணி மனோஜிடம் போராடி தோற்று விட்டாள், அவள் அம்மா பார்த்துக் கொடுத்த வாழ்க்கையும் சரியில்லை ரோகிணியே தேடிய வாழ்க்கையும் சரியில்லை! நாளை காலை 10 மணிக்கு விவாகரத்து செய்ய ரோகிணியும் வேறு மனமில்லாமல் ஒத்துக் கொண்டாள்

திருவிழா போல் கொண்டாடும் விஜயா

விஜயாவுக்கு அளவு கடந்த சந்தோஷம் நம் வீட்டிற்க்கே பிடித்த மேடை ஒன்று ஒழிய போகிறது நாளை மனோஜ் அந்த பார்லர் கடையை விவாகரத்து செய்து விடுவான் இனி எல்லாம் அவனுக்கு நல்ல காலம் தான் அவனுக்கு இன்னொரு பணக்கார பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பேன் என எல்லாரிடமும் கூறிக் கொண்டிருக்கிறாள், நாளை விவாகரத்து செய்வதை ஒரு திருவிழா போல் கொண்டாடுவதாக பார்வதியிடமும் லாயர் கிருஷ்ணராமிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்

நாளைய நாளுக்காக அந்த வீட்டில் இருக்கும் எல்லோருமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு பக்கம் மீனா ரோகினி நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள், இன்னொரு பக்கம் விஜயா கொண்டாடிக் கொண்டிருக்கிறாள் நாளையோடு ரோகிணியின் அத்தியாயம் அந்த சீரியலில் இருந்து முடிய போகிறது! நாளை மனோஜ் மற்றும் ரோகிணியின் மனநிலை எப்படி இருக்கும்? மனோஜ் திடீரென்று ரோகினியை மறக்க முடியாது என சொன்னாள் எப்படி இருக்கும்?? என்ன நடக்கிறது நாளை எபிசோடை பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *