தொடர்ந்து தவெக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர்
தமிழக முதல்வராக ஜோஷப் விஜய் பொறுப்பேற்ற பிறகு ஆகஸ்ட் 5,2026 ல் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது, இதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, குறிப்பாக வேளாண் துறை பட்ஜெட் அறிக்கையானது அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்க பட்டது,

இந்த பேரவைக்கு ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம் எல் ஏ க்கள் கலந்துகொள்ள வருகை புரிந்தனர். இதில் கருப்பு சட்டை, கருப்பு பேட்ச் அணிந்து திமுகவினர் வந்தனர்
தவெக அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளை ஏமாற்றும் விதமாக அமைந்துள்ளதாகவும் lதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தவெக அரசு செய்த பயிர்க்கடன் தள்ளுபடியில் விவாசியிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை, வாக்குறுதியில் சொன்னது போல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய கூறி டெல்டா விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர், அந்த வகையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கருப்பு பேட்ச் அணிந்துருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ப்ளாஸ்ட் வேஸ்ட் ஆனது அடுக்கடுக்காக கேள்விகள்
நிதி துறை அமைச்சர் மரியா வில்சன் முதல் நிதி தாக்கல் அறிக்கையை வெளியிட்டார்,அதை கேட்ட பிறகு திமுகவினர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளனர், திமுக தலைவரும், முன்னால் முதலமைச்சரும் முக ஸ்டாலின், ப்ளாஸ்ட் ப்ளாஸ்ட் என்று இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு வேஸ்ட் வேஸ்ட் என புரிந்துரிக்கும்
மாற்றம் மாற்றம் என்று சொல்லிவிட்டு வெறும் பெயர் மாற்றங்கள் மட்டுமே உள்ளதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்
ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
பட்ஜெட்டில் எந்த ஒரு திட்டமும் முழுமையாக இல்லை. புதிய திட்டம் எதுவும் இல்லை. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை
தவெக குறுகிய காலத்தில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. நாங்கள் கொரோனா காலத்தில் கூட சிறப்பாக செய்தோம் என விமர்சித்துள்ளது

