இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் மற்றும் மருத்துவ தகவல் 03.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 03.08.2026
பரபாவ வருடம் ஆடி 18, திங்கட்கிழமை, August 03, 2026 பஞ்சாங்கம் –
திதி : 10:54 PM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : உத்திரட்டாதி 10:00 PM வரை பிறகு ரேவதி
யோகம் : சுகர்மம் 09:13 PM வரை, அதன் பின் த்ருதி
கரணம் : கௌலவம் 11:09 AM வரை பிறகு சைதுளை 10:54 PM வரை பிறகு கரசை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை நல்ல
நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை
எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (03.08.2026)
மேஷம் -நட்பு அதிகரிக்கும்
ரிஷபம் -லாபம் அதிகரிக்கும்
மிதுனம் -உதவி கிடைக்கும்
கடகம் -நன்மை கிடைக்கும்
சிம்மம் -ஆதாயம் கிடைக்கும்
கன்னி -மன நிறைவு
துலாம்-ஆரோக்கியம் தேறும்
விருச்சிகம்-சினம் உண்டாகும்
தனுசு -சிக்கல் அதிகரிக்கும்
மகரம் -உடல் அசதி
கும்பம் -பெருமை சேரும்
மீனம் -முயற்சியில் வெற்றி
மருத்துவ தகவல்கள்
சளி பிரச்சனைகளில் இருந்து விடுபட, உப்பு நீர் கொப்பளித்தல்,துளசி கஷாயம்,இஞ்சி டீ,நீராவி பிடித்தல் போன்ற வீட்டு வைத்தியம் செய்து சளியை துரத்தலாம்
சுக்கு அல்லது இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அதனுடன் தேன் கலந்து குடிக்கவும். இது நெஞ்சுச் சளியைக் கரைக்க உதவும்
துளசி இலைகள், மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்துத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அருந்தவும். இது சளியை வெளியேற்றச் சிறந்த வழியாகும்
சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது மஞ்சள் தூள் சேர்த்து ஆவி பிடிக்கலாம். இது மூக்கடைப்பை நீக்கி நல்ல சுவாசம் தர உதவும்
சளி இருக்கும்போது பால், குளிரூட்டப்பட்ட பானங்கல் தவிர்க்கவும்

