electionNEWசெய்திகள்தமிழகம்தேசியம்வாழ்வியல்

தவெக – காங்கிரஸ் கூட்டணி – 118 இட பெரும்பான்மை உறுதி!! நீண்ட கால கூட்டணியான திமுக கட்சியிலிருந்து விலகல் ஏன்??

2026 சட்டமன்ற தேர்தலில், 108 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, விஜய் தலைமையிலான tvk கட்சி, இருப்பினும் 10 இடங்கள் குறைவாக உள்ளது,விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது, இதற்க்கு காரணம் என்ன??மேலும் நீண்ட கால கூட்டணியான திமுக கட்சியில் இருந்தும் விலகியுள்ளது ஏன்?? என தெளிவாக பார்க்கலாம்

தவெக – காங்கிரஸ் அதிகார பூர்வ கூட்டணி

2026 சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பெற்றுள்ளது தவெக கட்சி, இருப்பினும் 118 இடங்கள் தக்கவைக்க இயலாத ” தொங்கு சட்டசபை ” நிலவி வந்த நிலையில் இன்று, மே 6 2026 ல் தமிழ்நாட்டின் நலன் கருதி, காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக, தவெக கூட்டணி சேர்ப்பதாக முடிவெடுத்துள்ளது,டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு, அவசரமாக காணொலி மூலமாக நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவை வழங்குவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக கட்சியில் இருந்து விலகல் ஏன்??

தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக கட்சி மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் முரண்பாடு இருந்தது,38-40 தொகுதி கேட்ட நிலையில், 32 தொகுதிகளையே கொடுத்துள்ளது, மேலும் அமைச்சரவையில் திமுக ஆட்சிக்கு வந்தால் காங்கிரசிற்கும் பங்கு ஆட்சி வேண்டும் என்ற கோரிக்கையை திமுக ஏற்கவில்லை

ஏற்கனவே 2024 சட்டமன்ற தேர்தல் நடந்தபொழுது திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சியே வைத்திருந்தது, இருப்பினும் தேர்தலுக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் திமுகவானது, நீண்ட கால கூட்டணியிலிருந்து வெளியேற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த கட்சி தாவல், திமுகவினர் “துரோகி ” என்று விமர்சித்து வருகின்றனர்

எதிர்கால திட்டம்

இந்த உடன்பாடு வெறும் ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தல், மாநிலங்களவை தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் தொடரும். விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இணைந்து, தமிழக மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து, இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

ஆளுநரை சந்திக்கும் விஜய்

ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை விஜய், ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்திக்க இருக்கிறார், தற்போது பனையூர் tvk தலைமை அலுவலகத்தில்,காங்கிரஸ் தலைவர்களை பூங்கொத்து கொடுத்தும்,சால்வை அணிவித்தும் வரவேற்று கொண்டிருக்கின்றனர் தவெக நிர்வாகிகள். விஜய் முதலமைச்சர் பதவி விழாவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற திட்டமிருப்பதாகவும், மே 7அல்லது மே 8 அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்ப விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *