கடன் தொல்லை நீங்க சித்திரை மாத தேய்பிறை சஷ்டி விரதம்
முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக சஷ்டி விரதம் கருத்தப்படுகிறது,பொதுவாக தேய்ப்பிறை மற்றும் வளர்பிறை சஷ்டி இரண்டுமே விரதத்திற்கு உகந்த நாளாகும்,சித்திரை மாதத்தில் வரும் தேய்ப்பிறை சஷ்டி விரதத்தை மேற்கொண்டு வந்தால் பகை, காரிய தடை, எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகள் நீங்கி சந்தோசம் பெருகும்.தேய்பிறை சஷ்டியில் விரதம் இருப்பது தோல்விகளை வெற்றியாக மாற்றும், மன அமைதியைத் தரும் மற்றும் சத்ரு பயத்தை நீக்கும்
தேய்ப்பிறை சஷ்டி நாள்
தேதி : மே 7,2026
கிழமை : வியாழன் கிழமை
தமிழ் தேதி : சித்திரை 24
சஷ்டி திதி நேரம் :மே 7 ஆம் தேதி காலை 10.14 தொடங்கி,மே 8 வெள்ளிக்கிழமை மதியம் 12.22 மணி வரை
விரதம் முறை
சூரியன் உதிப்பதற்கு முன் அதிகாலை எழுந்ததும் நீராடி,விரதத்தை தொடங்க வேண்டும்.நாள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் மேற்கொள்ளலாம் அல்லது பால், பழங்கள் உட்கொண்டோ விரதம் இருக்கலாம்.
வழிபாட்டு முறை
சஷ்டி தினத்தில் முருகப்பெருமானை நினைத்து, அந்த நாள் முழுதும் கந்த சஷ்டி கவசம் மற்றும் கந்த குரு கவசம் அடிப்பது சிறந்த பலனை கொடுக்கும்
முருகப்பெருமானின் மூல மந்திரமான “ஓம் சரவணபவ” என்ற நாமத்தை 108 தடவை உச்சரிக்கலாம்
மாலையில் அருகில் உள்ள முருகன் ஆலயங்களுக்கு செல்லலாம் அல்லது வீட்டிலேயே பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அலங்கரித்து செய்து சர்க்கரை பொங்கல் எத்தனை வைத்தியமாக படைத்து வழிபடலாம்
சஷ்டி விரதத்தின் பலன்கள்
குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் உண்டாகும் ” குழந்தை பேறு உண்டாகும், தீராத நோய்கள் தீரும் கடன் தொல்லைகள் ஒழியும், காரிய தடை நீங்கும்

