விஜயா சொன்ன மாதிரி மனோஜின் முதல் வாரிசு வந்தாச்சு -விஜயாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்தாச்சு
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று விஜயா, ரோஹிணி மனோஜிற்கு விவாகரத்து கொடுத்து விடுவாள் என்ற சந்தோஷத்தில் இருக்கிறாள், ஆனால் நடந்ததோ வேறு ரோஹிணி மனோஜின் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பது இப்போதுதான் ரோகினிக்கே தெரியவருகிறது, யாருமே எதிர்பாராத ஒரு திருப்பம், எப்படியோ விஜயா ஆசைப்பட்ட மாதிரியே மனோஜ் குழந்தை தான் அந்த வீட்டிற்கு மூத்த வாரிசு! என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்
ரோகினியை லெப்ட் ரைட் வாங்கும் விஜயா
ரோகினிக்கு அண்ணாமலை, முத்து, ரவி ஸ்ருதி, மீனா என்று அனைவருமே “இனிமேலாவது நேர்மையான வழியில் வாழு, அதுதான் கடைசி வரைக்கும் கூடவே இருக்கும் ” என்றெல்லாம் கூறி அறிவுரை கூறி கொண்டு இருக்கிறார்கள்,
விஜயாவால் பொறுத்து கொள்ள முடியவில்லை, அவ என்ன ரிடைர்மெண்ட் பங்க்சன் க்கா வந்துருக்கா?? ஆளாளலுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கீங்க, சீக்கிரம் கையெழுத்து போட்டு போக சொல்லுங்க அவளைனு திட்டிகிட்டு இருக்காங்க
credits -google

கையெழுத்து போடும் சமயத்தில் மயக்கம்
ரோகினிக்கு மனோஜை விட்டு பிரிவது என்பது கொடுமையாக இருக்கிறது, விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட கையெல்லாம் நடுங்குகிறது, மனம் தாங்காமல் மனோஜை பார்த்து அழுதுகொண்டே இருக்கிறாள், மனோஜிற்கு ரோஹிணி மீது இரக்கமே வரவில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது
கையெழுத்து போடும் நேரத்தில், ரோஹிணி மயக்கம் போட்டு கீழே விழுகிறார், மீனாவும்,ஸ்ருதியும் ரோகினியை எழுப்ப முயற்சிக்கிறார்கள், எழவில்லை, உடனே ஸ்ருதி டாக்டர் வரவைத்து பார்க்கிறார்
விஜயாவிற்கு நெஞ்சுவலி வந்தாச்சு
டாக்டரும் பார்த்து விட்டு”” எல்லாம் நல்ல விசியம் தான்! உங்க மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் “இனி அடிக்கடி மயக்கம், வாந்தி வரும் என மனோஜை பார்த்து சொல்கிறார், மனோஜிற்கு ஒன்னும் புரியவில்லை, பிறகுதான் மனோஜிற்கு புரியவருகிறது, ரோகினியின் நல்ல நேரம் கடைசி நிமிடத்தில் கர்ப்பம் என தெரியவருகிறது.
இதை கேட்ட மொத்த குடும்பமும் அதிரிச்சியில் முழிக்கிறார்கள், மனோஜும் திருதிருவேன முழிக்கிறான், இதோடு எல்லாம் முடித்து விடலாம், என நினைத்தான் மனோஜ், ஆனால் இனிமேல் தான் விஜயாவிற்கு மூச்சே நின்று விட்டது, தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்த ரோஹிணி, மனோஜிற்கு விவாகரத்து கொடுப்பதில் விருப்பம் இல்லை என கூறிவிட்டாள்
மனோஜின் நிலை அதோகதி தான்
ரோஹிணி டிவோர்ஸ் கொடுத்து விடுவாள் என்று பணக்கார வீட்டில் மருமகன் ஆனான் மனோஜ், இனி என்ன நடக்க போகுதோ?? விஜயாவிற்கும் ரோகிணிக்கும் மனோஜின் திருமணம் தெரிய வந்தால் என்ன நடக்கும்?? நாளைய எபிசோட்டில் காணலாம்

