இன்றைய ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும் நாட்டு நடப்புகள்
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம் கூடவே நாட்டு நடப்பும் தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் 23.07.2026
பரபாவ வருடம் ஆடி 7, வியாழக்கிழமை, July 23, 2026 பஞ்சாங்கம் –
திதி : 07:03 AM வரை நவமி பின்னர் தசமி
நட்சத்திரம் : விசாகம் 01:42 AM வரை பிறகு அனுஷம்
யோகம் : சுபம் 07:19 PM வரை, அதன் பின் சுப்ரம்
கரணம் : கௌலவம் 07:03 AM வரை பிறகு சைதுளை 08:06 PM வரை பிறகு கரசை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 11. 00 மணி முதல் 12.00 வரை
நல்ல நேரம் மாலை: 12.15 மணி முதல் 01.15 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை
எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
இன்றைய ராசிபலன் (23.07.2026)
மேஷம் -பயம் உண்டாகும்
ரிஷபம் -தொழில் வெற்றி
மிதுனம் -எதிர்ப்பு உண்டாகும்
கடகம் -ஆரோக்கியத்தில் சுகம்
சிம்மம் -சுபகாரியம் உண்டாகும்
கன்னி -பாராட்டு கிடைக்கும்
துலாம்-மேன்மை உண்டாகும்
விருச்சிகம்-ஆர்வம் அதிகரிக்கும்
தனுசு -இன்பம் பெருகும்
மகரம் -ஏமாற்றம் உண்டாகும்
கும்பம் -நன்மை உண்டாகும்
மீனம் -முயற்சியில் வெற்றி
நாட்டு நடப்புகள்
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக ஒன்றிய அரசினை கண்டித்தும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் மாணவர்கள் 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்,
இந்த போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் கலந்து கொண்டார், அவரை தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்,இவர்களின் மீது போலீசார் புகை குண்டு வீச்சு,லத்தி கொண்டு அடித்து மாணவர், மாணவிகளின் மீது தாக்குதலில் ஈடுபட்டு கைது செய்தனர்,
காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜுன கார்கே, பொது செயலர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி போன்றோர் பிரதமர் மோடி இல்லத்தின் முன் போராட்டம் நடத்தினர்,, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையுமே போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

