மனசாட்சி இல்லாத மனோஜ் -ரோகிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ஆத்திரத்தில் ரோஹிணி
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய திருப்பமாக மனோஜ்க்கும் ரோகிணிக்கும் குழந்தை உருவாகி இருக்கிறது, கர்ப்பமாக இருப்பதை தெரிந்த ரோகிணி மனோஜிர்க்கு விவாகரத்து கொடுக்க விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டால் இது மனோஜின் குழந்தை தான் என்றும் சொல்லிவிட்டாள் ஆனால் மனோஜோ அந்த குழந்தைக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறான், பத்தாததுக்கு இரண்டாவது திருமணம் செய்து விட்டான் என்ன நடந்தது பார்க்கலாம்
credits -google

மனசாட்சி இல்லாத மனோஜ்
டிவர்ஸ் கையெழுத்து போட வந்த இடத்தில் ரோகினி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்கிறாள், இனி யாராலயும் என்னையும் மனோஜையும் பிரிக்க முடியாது, ” கடவுளே நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் மனோஜின் குழந்தையை என் வயிற்றில் கொடுத்திருக்கிறார்” இனிமேல் நான் மனோஜிர்க்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்,
வீட்டில் இருக்கும் அனைவருமே அதிர்ச்சியில் இருக்கின்றனர், மனோஜோ திரு திருவென்று முழித்துக் கொண்டிருக்கிறார், மனோஜ் தான் தப்பு செய்திருப்பான் என விஜயாவை தவிர முத்து, மீனா, ரவி, ஸ்ருதி என அனைவருமே சந்தேக படுகிறார்கள்,ரோஹிணி குழந்தை விசயத்தில் தப்பு செய்திருக்கமாட்டாள் என தான் கூறுகிறார்கள்
சத்தியம் செய்யும் மனோஜ்
மனோஜ் எனக்கும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சத்தியம் செய்கிறார், அதை நம்பி விஜயா லாயர் கிருஷ்ணா ராமிடம் “என் பையன் மேல் நம்பிக்கை உள்ளது, டிவோர்ஸ் கேஸ் நடத்துங்கள் ” என சொல்லிக்கொண்டு இருக்கிறார்,
ஆனால் கிருஷ்ணா ராமிற்கு மனோஜ் மீது நம்பிக்கையே இல்லை, ரோஹிணி மனோஜ் கண்முன் தான் சொன்னால், உங்க பையன் எதுவுமே பேசாமல் முழிக்கிறார், அதிலேயே தெரியுது உங்க பையன் தான் அப்பா னு, முதலில் மனோஜ் குழந்தையை என்று DNA டெஸ்ட் செய்து பாருங்கள்
ரோஹிணி கேஸ் கொடுத்த மனோஜூக்கு ஜெயில் தான்
லாயர் கிருஷ்ணா ராம், ரோஹிணி மட்டும் மனோஜின் குழந்தை தான் என நிரூபித்து விட்டால், மனோஜ் ரோகினிக்கும் அவள் குழந்தைக்கும் சேர்த்து பராமரிப்பு செலவு மாதம் மாதம் 50,000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் கோர்ட்டில் பொய் சொன்னதற்காகவும், நேரத்தை வீணாக்குனத்திற்கும் மனோஜின் மேல் தான் கேஸ் போடுவார்கள், உங்க பையன் ஜெயிலுக்கு போயிடுவான் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்
credits -google

மனோஜின் முட்டாள் தனம்
மனோஜை பொருத்துவரை பணம் தான் முடிவு செய்யும் அவருடன் பயணிக்க வேண்டுமா?? இல்லையா?? என்று விஜயா சொன்ன உடனே ரோகினிக்கு விவாகரத்து கொடுக்க ஒத்துக்கொண்டன், பணக்காரன் ஆக வேண்டும் என்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கனகாவை குடும்பத்திற்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டான்
இப்போது ரோகினியின் குழந்தை மூலம் வசமாக சிக்கலில் சிக்கி முழித்து கொண்டிருக்கிறார், ரோகினிக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் மனோஜ் கண்டிப்பாக ஜெயிலில் கம்பி எண்ண வேண்டியதுதான், இனி அடுத்து என்ன நடக்கும் என மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள், நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்

