இன்றைய ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும் மருத்துவ தகவல்
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் 24.07.2026
பரபாவ வருடம் ஆடி 8, வெள்ளிக்கிழமை, July 24, 2026 பஞ்சாங்கம் –
திதி : 09:13 AM வரை தசமி பின்னர் ஏகாதசி
நட்சத்திரம் : அனுஷம் 04:36 AM வரை பிறகு கேட்டை
யோகம் : சுப்ரம் 08:11 PM வரை, அதன் பின் பராம்யம்
கரணம் : கரசை 09:13 AM வரை பிறகு வனசை 10:23 PM வரை பிறகு பத்திரை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 12.15 மணி முதல் 01.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : காலை 03.00 முதல் 04.30 மணி வரை
குளிகை: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் (24.07.2026)
மேஷம் -தொழில் வெற்றி
ரிஷபம் -செலவு அதிகரிக்கும்
மிதுனம் -பாராட்டு குவியும்
கடகம் -நன்மை ஏற்படும்
சிம்மம் – குடும்பத்தில் அமைதி
கன்னி -உதவி கிடைக்கும்
துலாம்-கவனம் தேவை
விருச்சிகம்-ஆரோக்கியத்தில் நலம்
தனுசு -லாபம் அதிகரிக்கும்
மகரம் -ஊக்கம் உண்டாகும்
கும்பம் -மன நிம்மதி
மீனம் -விவேகம் உண்டாகும்
பாம்புக்கடி
பாம்பு கடித்தவுடன் பாதிக்கப்பட்டவரை அமைதியாகவும், பதட்டம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும், பாம்பு கடித்த இடத்தை அசைக்காமல் இருக்க வேண்டும்,
கடித்த இடத்தில் வீக்கம் ஏற்படும் அப்பொழுது இரத்தம் தடைப்படாமல் இருக்க, வளையல், மோதிரம் இருக்கமான ஆடையை அகற்ற வேண்டும்
தாமதிக்காமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பாம்பு நச்சு முறிவு மருந்து ( anti -snake venom ASV )ஊசியை செலுத்த வேண்டும்
பாம்புக்கடிக்கு நாட்டு வைத்தியத்தை நம்பி இருக்க கூடாது, பச்சை மூலிகை அல்லது நாட்டு வைத்தியம் கடித்த இடத்தில் தொற்றினை உருவாக்க கூடும், இன்னும் சிக்கலில் மாட்டிகொள்வீர்கள்

