சினிமாசெய்திகள்வாழ்வியல்

மலையாள நடிகர் அனில் முரளி இன்று காலமானார்

மலையாளத் திரையுலகம் அடுத்த இழப்பை சந்தித்துள்ளது. பல படங்களில் வில்லனாக நடித்திருக்கும் அனில் முரளி இன்று காலமானார். கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்பட்டு இருந்த அனில் முரளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 30 ஜூலை 2020 இறந்தார்.

திரைப்பயணம்

மலையாள படங்களில் பெரும்பாலும் நடித்தவர் அனில் முரளி. 1993ல் இருந்து திரையுலக பயணத்தை மேற்கொண்ட இவர் வில்லனாக களம் இறங்கி பின் துணை கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். மலையாள திரை உலகில் முன்னணிக் கதாநாயகர் அனைவருடனும் தன் பயணத்தை மேற்கொண்டுள்ளார் அனில் முரளி.

2013 தமிழ் திரையுலகத்திற்கும் தன் பயணத்தை திசைதிருப்பி பல படங்களில் போலீஸ் அதிகாரியாகவே காட்சியளித்தார். தமிழ் மக்களுக்கு படம் பார்க்கும் ரசிகர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் எவ்வாறு இருப்பார்கள் என பாடம் கற்றுக் கொடுப்பது சினிமாதான். அனில் முரளி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் என்பதை பலமுறை தன் திறமையான நடிப்பை கொண்டு நிரூபித்துள்ளார்.

2011 இல் தெலுங்கு திரையுலகத்திற்கும் சென்ற இவருக்கு ஒர்இரு தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

2020ன் முற்பகுதியில் வெளியான மலையாள படமான ஃபாரன்சிக் மற்றும் தமிழ் படங்களான நாடோடிகள் 2 வால்டர் போன்றவற்றில் நடித்துள்ளார். அதுவே அவரின் திரைப்பயணத்தில் கடைசியாக அமைந்துள்ளது.

வாழ்க்கை

திருவனந்தபுரத்தில் பிறந்த மலையாள குட்டன் அனில் முரளியை திரை உலகத்தினர் அனில் ஏட்டா என அன்பாக அழைத்தனர். மலையாள மொழியில் ஏட்டா என்றால் அண்ணன் என்ற அர்த்தம் கொடுக்கும் சொல்‌. சுமா என்ற பெண்மணியை மணந்து ஆதித்யா அருந்ததி என இரண்டு குழந்தைகள் உடையைக் இவர் தன்னுடைய 56வது வயதில் இறந்துள்ளார்.

சமூக வலைத்தளம்

அணில் ஏட்டாவிற்கு மனமார்ந்த இரங்கலையும் அவரின் ஆன்மா சாந்தி அடையவும் மலையாள திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அவரவர் மன இரங்கல்களை தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்கு தெரிந்த மலையாள பிரபலங்களான மோகன்லால் பிரித்திவிராஜ் டொவினோ தாமஸ் மம்முட்டி நிவின் பாலி மற்றும் பலர் தன்னுடைய ட்விட்டர் பேஜில் அவரவர் இரங்கல்களை வருத்தத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.

மக்களே அனில் முரளி அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என பிரார்த்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *