Newsகல்விசெய்திகள்தமிழகம்தேசியம்விழிப்புணர்வு

டெல்லியில் நடைபெற்ற11 வது நிதி ஆயக் கூட்டம் திருப்பம்சங்கள் மற்றும் நோக்கங்கள் என்ன??

முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு இரண்டாவது டெல்லி பயணம் சென்றார்,இதில் மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கூட்டு ஆலோசனை நடைபெற்றது, இது 11 வது நிதி ஆயோக் குழு கூட்டம் நடைபெற்றருக்கிறது, இதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், எதிர்கால திட்டத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளார் என்று பார்க்கலாம்

முதலமைச்சர் விஜய் வைத்த கோரிக்கைகள்

கடந்த காலங்களில் சில முதலமைச்சர்கள் இந்த நிதிஆயோக் கூட்டத்தை தவிர்த்துள்ளனர், ஆனால் இம்முறை இந்த கூட்டத்தில் 28 மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டது வரலாற்று மாற்றமாகும், இதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக கூட்டத்தில் பேசியதை பார்க்கலாம்

இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரம் மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு, தனது உறுதித் தன்மையும், தொடர்ந்து வளர்ச்சியும் வெளிப்படுத்துகிறது

பெண்களின் கல்வி,சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெண்களுக்கான முன்னேற்றத்தில் குறிப்பிட்ட வகையில் எட்டியுள்ளது

மகளிர் சுய உதவிக் குழுவானது சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார திட்டங்களுக்கான ஒரு பெரிய கருவியாக மாறி உள்ளது

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் 42 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உள்ளனர்

நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியவற்றின் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் நன்றாக தமிழ்நாடு விளங்குகிறது

இந்தியா கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வைத்த கோரிக்கை

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு நிலுவலையில் உள்ள ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். கல்வி நிலுவை நிதியை விடுவிக்க புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென நிர்பந்திக்கக்கூடாது

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப வேண்டும்.

சென்னை முதல் குமரி வரை அதிவேக ரயில்வழித்தடம் அமைக்க வேண்டும்.செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.

கரூர் – கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.ஒகேனக்கல் 3ஆம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும்.

இலங்கை, பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்ற மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவற்கு தவெக அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *