தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய அம்சங்கள்
தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில், அந்தந்த பகுதி சார்ந்த மக்களுக்கான செயல் திட்டங்களை அறிவித்து வருகிறார். பொது மக்களும் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று பல வாக்கு சேகரிப்புகளில் கூறுகின்றனர், 2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் ஆட்சி அமைக்கப்போவது யாரென்று பெரும் எதிர்பார்ப்பில் போட்டி போட்டு பல கட்சிகள் வாக்குறுதி அளித்து வருகின்றனர் அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முக்கிய 10 அமசங்களை வெளியிட்டுள்ளார்

தவெக தேர்தல் அறிக்கை – 10 முக்கியமான அம்சங்கள்
- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, 6 விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் பட்டுச்சேலை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்களின், மகளிர் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன்.
- உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள், ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன், நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள், ஏஐ மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்.
- குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை, ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை, போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு
- முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு. நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா.
- மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை, ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம், பணி ஓய்வின் போது ரூ.15 லட்சம்.
- வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை, ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப், 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள், தொழில் தொடங்க ரூ. 25 லட்சம் கடன், அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணை.
- நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி, பயிர்க் கடன்கள் தள்ளுபடி, MSP: நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500, 5 லட்சம் சோலார் பம்புகள், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100% பயிர்க் காப்பீடு.
- தடைக்கால நிவாரணம் ரூ.27,000, மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு, மீனவர்களுக்கு நிரந்தர வீடு.
- 2036-க்குள் ரூ.15 டிரில்லியன் பொருளாதாரம், ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐநகரம், MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக ’மாஸ்டர் பிளான்’: தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்.
- லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில், காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள், நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்.
