பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 வருட தவம் பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை நேரடியாக கட்சிகள் எதிர்க்காமல் இதற்கு வேறு சாக்கு போக்குகள் சொல்கின்றன இதனை சுட்டிக்காட்டி பேசிய நரேந்திர மோடி அவர்கள் கடந்த 30 வருடங்களாக பெண்களுக்கு என இட ஒதுக்கீட்டில் தெய்வ நிலை காணப்படுகின்றது அதனை முழுமையாக அகற்ற வேண்டும் என்றார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
இந்தியாவில் மகளிருக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகள் தொழில்நுட்பத்தை காரணமாக தெரிவித்து மறைமுகமாக எதிர்ப்பதை பிரதமர் மோடி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். 30 வருட பேசு பொருளான பெண்களுக்காக இட ஒதுக்கீட்டினை நிறைவேற்ற ஆளும் அரசு தயாராக இருப்பதாக மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு அதிகரிக்கும் பாராளுமன்ற சீட்டுகள்
நாட்டில் மகளிருக்கு என 33 சதவீதம் இட ஒதுக்கீடு அதிகரிப்பு நேரத்தில் நாட்டில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட பாராளுமன்ற சீட்டுகள் 800க்கு மேல் அதிகரிக்க ஆளும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தமிழக அரசு மற்றும் சிலர் எதிர்க்கவும் செய்கின்றனர். எனினும் இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக இருக்கின்றது.

