இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிறப்பு 11.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் 11.08.2026
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30 மணி வரை
எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை
குளிகை: காலை 12.00 மணி முதல் 01.30 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (11.08.2026)
மேஷம் -துணிச்சல் உண்டாகும்
ரிஷபம் -செலவு அதிகரிக்கும்
மிதுனம் -இன்பம் அதிகரிக்கும்
கடகம் -லாபம் பெருகும்
சிம்மம் -யோகம் உண்டாகும்
கன்னி -துன்பம் பெருகும்
துலாம்-உற்சாகம் பிறக்கும்
விருச்சிகம்-பொறுமை அவசியம்
தனுசு -சினம் ஏற்படும்
மகரம் -சாந்தம் உண்டாகும்
கும்பம் -வெற்றி நிச்சயம்
மீனம் -தொழில் உயர்வு
உங்களுக்கு தெரியுமா
கிரானைட் கற்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான கட்டடக் கோயில் சென்னையில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை கோவிலாகும்,இது இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றாகும்,
உயரம் இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது,மொத்தம் ஏழு கோவில்கள் இருந்ததாகவும் அவற்றில் தற்போதைய கடற்கரைக் கோவில் மட்டுமே இருப்பதாக கூறுகின்றனர்,மாமல்லபுரம் கடற்கரையில் மேற்கொண்ட அகழாய்வில் ஒரே கல்லால் ஆன வராஹ மூர்த்தியின் சிற்பம், ஒரு பழங்காலக் கிணறு, பல்லவர் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள், படிகளைப் போன்ற அமைப்பு ஆகியவை கண்டறியப்பட்டன.

