அரசியலுக்கு காய் நகர்த்தும் தனுஷ் -நற்பணி மன்றங்கள் தொடக்கம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ், ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி கொண்டிருக்கிறார், மேலும் சினிமாவை பொறுத்தவரை நடிகரையும் தாண்டி, பாடலாசிரியர், இயக்குனர்,பாடகர் தனி திறமையை வெளிக்காட்டி ரசிகர்களையும் தக்க வைத்திருக்கிறார், தற்போதைய சூழல் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கு பல வாய்ப்புக்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்
முதற்கட்ட வேலை
சமீபத்தில் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் செய்து வந்தார்,இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்கள் 150 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை, 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு 30 ஆட்டோக்களை தனுஷ் வழங்கினார்.
முதற்கட்ட நடவடிக்கையாக தொகுதி வாரியாக நற்பனி மன்றங்களை அமைக்க திட்டமிட பட்டுள்ளதாக தெரிகிறது.‘அனைதிந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் நற்பணி மன்றங்களை அமைக்கவிருக்கின்றனர்,சட்டமன்றத் தொகுதி வாரியாக நற்பணி மன்றங்களை தொடங்க இருக்கிறார்.
முதலில், கோவை, கோவை தெற்கு மாவட்ட தலைமைக்கு உட்பட்ட நற்பணி இயக்கங்கள் செயல்படும் தொகுதிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி, கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோவை சூலூர் சட்டமன்றத் தொகுதி, கோவை மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு நற்பணி இயக்கத்தை தொடங்கவும்.
உறுப்பினர்களை சேர்க்கவும் கோவை மாவட்ட தலைவரை தொடர்பு கொள்ளுமாறு ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிட பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் மாவட்டம் வாரியாக 55 தலைவர்கள் தனுஷ் ரசிகர் மன்றத்திற்கு நியமிக்க பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

