electionNEWNewsசெய்திகள்தமிழகம்தேசியம்வாழ்வியல்

விஜய் vs ஆளுநர்- தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பதவியேற்பு விழா அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?? தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் போராட்டம்

தமிழக சட்டசபையில் ஆட்சியை அமைக்க 118 இடங்கள் தேவை, தனி கட்சியாக தமிழக வெற்றி கழகம் 108 பெரும்பான்மை இடத்தை பெற்றுள்ளது இருப்பினும் 10 இடங்கள் குறைவாக உள்ளது, நேற்று தமிழக வெற்றிக்கழகத்துடன் காங்கிரஸ் கம்யூனிட்டி கட்சி கூட்டணி ஆதரவு அளித்து 113 இடங்களை பெற்றுள்ளது, மேலும் ஐந்து இடங்கள் குறைவாக இருப்பின் அதுவரை பதவியேற்பு விழாவை உறுதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்

Credits -Google

ஆளுநரின் கறார் நிபந்தனை

நேற்று ஆளுநர் ஆர் வி அர்லோகரை சந்தித்த விஜய், ஆட்சி அமைக்ககோரி கடிதத்தை அளித்துள்ளார், ஆனால் ஆளுநரிடமிருந்து 118 இடங்கள் பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்றும், 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை நேரில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை

விஜய் தரப்பில் மற்ற சிறு கட்சிகள் மற்றும் சுயாட்சை வேட்பாளர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது,வி.சி., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், விஜய்க்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளன. அதேபோல், மன்னார்குடி அ.ம.மு.க., – எம்.எல்.ஏ., காமராஜையும், த.வெ.க.,வுக்கு அழைத்து வர முயற்சி நடக்கிறது. இந்த முயற்சி சாதகமாக அமைந்தால், த.வெ.க.,வுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கும்.

திருமாவளவன் விஜய்க்கு ஆதரவு

திருமாவளவன் கூறியபோது, விஜய் ஆதரவு கோரியது தொடர்பாக, விசிக உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும், ஆனால் தற்போது ஆளுநர் அரசமைப்பு சட்டப்படி இயங்க வேண்டும், பாஜகவிற்கு சாதகமாக நடக்கக் கூடாது, தமிழ்நாடு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக முயற்சிக்கிறது, தமிழக வெற்றிக்கழகமானது தனி கட்சியாக 108 இடங்களை பெற்றுள்ளது, இதை புறக்கணித்து, குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவருவதோ அல்லது மறு தேர்தல் நடத்துவதோ தேவையில்லாதது என கூறியுள்ளார்

தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் போராட்டம்

மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பை மதித்து, பெரும்பான்மை ஆதரவை கொண்ட கூட்டணியை உடனடியாக ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அழைக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய ஜனநாயக போராட்டம் நடத்தப்படும் என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என ஆதரவு தெரிவித்துள்ளது

மேலும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படுவதாக அவர் மீது பல்வேறு கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.இதற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தம் உள்ளது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுப்பதாகவும் இது கண்டிக்கத்தக்கது என்றும் மாணவர் காங்கிரஸ் கூறியுள்ளது.மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்க வேண்டும் எனவும், பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் எனகாங்கிரஸ் எம். பி ஜோதிமணி கூறி உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *