கவன ஈர்ப்பு பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடிதம்
அரசியல் என்றாலே எப்பொழுதும் பரபரப்பும் ஒருவர் மாற்று ஒருவர் கருத்து சொல்வதும் பதில் சொல்வதுமாக இருக்கும் அதில் எந்த மாற்றமும் இருக்காது. தேர்தல் நேரம் என்று வந்துவிட்டால் சொல்ல வேண்டுமா இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுன் ரஜினி அவர்களைப் பற்றி திமுகவிற்கு பயந்து அரசியலில் இருந்து ரஜினி விளக்குவதாக கருத்துக்களை பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.
👉 ஆதவ் அர்ஜுன் ரஜினிகாந்த் குறித்து கூறியதை விரிவாக இங்கே படிக்கவும்
தலைவர்கள் கண்டனம்

தேவையில்லாத கருத்துக்களை தமிழக கட்சிகளுடன் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுன் பேசி இருக்கின்றார். அரசியலில் வராததற்கு காரணம் தெளிவாக ரஜினி அவர்களால் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு மேல் அவரை பேசி அரசியல் நாகரீகத்தை இழக்க வேண்டாம் என்று அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்து இருக்கின்றார். அது மட்டுமா பிஜேபி முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள் இது குறித்து பேசுகையில் இது சரியான அரசியல் அணுகுமுறை அல்ல மாமனார் வீட்டு சொத்தில் வாழும் மருமகனுக்கு இது போன்ற பேச்சுக்கள் முறையானதாக இல்லை என பேசியிருந்தார்.
மேலும் தமிழக வெற்றி கழகத்தை பட்டி தொட்டி எல்லாம் பரப்ப வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா முடிவு செய்திருப்பதாகவும் அதனை ஓட்டியே ரஜினிகாந்த் அவர்களை இழுத்து பேசி புகழ் தேடி இருக்கலாம் எனவும் தகவல்கள் கிடைக்கின்றன.
எது எப்படியோ ஆதவ் அர்ஜுன் பெயர் நன்றாக தமிழகம் முழுவதும் தெரிந்து விட்டது. தமிழக வெற்றி கழகத்தின் கணக்குகள் மக்களுக்கும் பிடிபட ஆரம்பித்துவிட்டது.
ரஜினிகாந்த் அவர்கள் நன்றி
தமிழக வெற்றி கழகம் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆது அர்ஜுனன் பேசிய உண்மையற்ற தகவல்களை கண்டித்து தனக்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் திரு அண்ணாமலை அவர்கள் அத்துடன் மற்ற தலைவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக பெயர் குறிப்பிட்டு தமிழக மக்களுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்து ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்ட தகவலானது தற்போது பெரிய வைரலாக வருகின்றது கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் பார்த்திருக்கின்றனர் அது மட்டும் தான் அரசியல் தகவல் பரிமாற்ற சூழலில் இது போன்று அதிகமான கவன ஈர்ப்பு பெற்ற ஒன்று என்றால் அது ரஜினி அவர்களிடையே கடிதம் தான். இனிமேலாவது அவரை வைத்து புகழ் தேடுவதை நிறுத்த வேண்டும் அரசியல்வாதிகள்.

