Jallikattu bullsகல்விதமிழகம்தேசியம்வணிகம்

புது தொழில் தொடங்குகிறீர்களா வெற்றியடைய இதை செய்யுங்கள்

நமது வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று புது தொழில் தொடங்குவது புது தொழில் தொடங்குகிறோம் என்றால் நிச்சயமாக அந்த தொழிலில் வெற்றி அடைவதற்கான பல வழிகளை ஆராய்ந்து சிந்தித்து அதற்கு ஏற்ப நமது செயலை ஒழுங்குபடுத்தி தொடங்குவதற்கு தேவையான ஆயுத்த வேலைகளை நாம் செய்வோம். அத்துடன் புதிய தொழில் தொடங்குவதற்கு முன்பு மற்றும் புதிய தொழில் தொடங்கிய பின்பு என நாம் பகுத்து வேலைகளை செய்ய தொடங்குவோம். புதிய தொழில் தொடங்குவதற்கு முன்பு நாம் தொழில் மற்றும் தொழிலுக்கான முதலீடு அது அத்துடன் அதற்கான இடம் தொழில் சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்குவது இது போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவையெல்லாம் எவ்வாறு முக்கியமோ அது போலவே தொழில் தொடங்குவதற்கான நல்ல நாள் மற்றும் பூஜை, சாஸ்திர முறைகள் செய்து இறைவன் அருள் பெற நடவடிக்கைகள் மேற்கொள்வோம். பெற்றோர் அருள் எவ்வளவு முக்கியமோ அதுபோல இறைவன் அருளும் முக்கியமானதாகும்.

புதிய தொழில் தொடங்கும் போது செய்ய வேண்டிய சாஸ்திர முறைகளை இங்கு கொடுத்துள்ளோம் படித்து பார்த்து அதனைப் போல் செய்து பயனடையுங்கள்.

புதிய தொழில் தொடங்க நல்ல நாள்

புதிதாக தொழில் தொடங்க ஆயுத்தப் பணிகளை எவ்வாறு தயார் செய்கின்றோமோ அதே போல நாம் ஆவணங்கள் முதலில் தயார் செய்து கொள்வோம். நல்ல நாள் குறித்து பூஜை செய்வது வழக்கம்.

புதிய தொழில் தொடங்க தேவையான சம்பிரதாய நடவடிக்கைகள்

புது தொழில் தொடங்குவது வெற்றி பெறும் வழிமுறை

சம்பிரதாய நடவடிக்கைகள் புதிய தொழில் தொடங்குபவர்கள் செய்வது ஆகச்சிறந்த பணிகளில் ஒன்றாகும். பெற்றோர் அருள் எவ்வாறு நாம் பெற வேண்டுமோ அதுபோல இறைவன் அருள் பெறுவதும் முக்கியமானதாகின்றது. இறைவன் அருள் பெற நாம் புதிய தொழில் தொடங்கும் நாளில் பூஜைகள் செய்ய வேண்டும் பூஜைகளைப் போல முக்கியமாக செய்ய வேண்டிய ஹோமங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. அதில் கணபதி ஹோமம் மற்றும் விநாயகர் அருள் தரும் மந்திரங்கள் செய்வது சிறந்தது. லட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை அவசியம் செய்யப்பட வேண்டும். இவற்றில் வாஸ்து ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்வது மிக முக்கியமாகின்றது.

புதிய தொழில் தொடங்க ஹோமங்கள்

புதிய தொழில் தொடங்கும் நாட்களில் கணபதி ஹோமம் செய்வது அவ்விடத்தில் இறையருள் கிடைக்கச் செய்யும் நமது முயற்சியானது வெற்றி பெற இறையருள் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

புதிய தொழிலுக்கு வாஸ்து மற்றும் நவகிரக ஹோமங்கள் :

புதிய தொழில் செய்யும் நாளில் நமது கடை திறப்பு அல்லது தொழில் திறப்பு நாளில் கணபதி ஹோமம் செய்வது இடத்திற்கான பலன் மற்றும் நமது மன ஓட்டம் சிறப்பான செயல்பாட்டிற்கும் இறை அருளுக்கு உதவும் அதைப்போலவே நவகிரக ஹோமம் வாஸ்து ஹோமம் ஆகியவை நமது தொழிலுக்கு தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கச் செய்வதோடு நேர்மறை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் மேலும் எதிர்மறை சக்திகளான பில்லி, சூனியம், கண் திருஷ்டி மற்றும் இடத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்க செய்யும் நமது செயல்பாடுகள் முன்னேற்றம் அடைந்து வெற்றிப்பாதை வலி அமைத்து கொடுக்கும்.

புதிய தொழில் தொடங்கும் நாட்களில் குடும்பத்தாருடன் ஒற்றுமை மனதுடன் எதையும் செய்யும்பொழுது அது முழு மனதாக வெற்றியைத் தரும்.

புது தொழில் தொடங்குகிறீர்களா? வெற்றி பெற இதை செய்யுங்கள் – சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரங்களை இங்கே படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *