Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனைதமிழகம்

திருமண வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் பங்குனி உத்திரம்- அதை எப்போது??எப்படி வழிபட வேண்டும்??

பங்குனி உத்திரம் நாளானது முருக பெருமானை வணங்கும் மிக முக்கிய நாளாகும்.இந்த நாளிர்க்கு பல சிறப்பான வரலாறு உண்டு என புராணங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பல தெய்வங்களின் திருமணம் இந்த நாளில் நடைபெற்றதாக குறிப்பிட பட்டுள்ளது.மேலும் இந்த நாளில் கல்யாண விரதம் இருந்து வழிபாடு செய்வோருக்கு திருமணம் சார்ந்த தடைகள் நீங்குவதாகவும், திருமணம் ஆன தம்பதியர் விரதம் மேற்கொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை, இந்த விரதத்தை எவ்வாறு கடைபிடிக்கலாம் என்பதை பார்க்கலாம்

பங்குனி உத்திரம் எப்போது??

Source credit – Google

பங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது

உத்திரம் நட்சத்திரம் ஆரம்பம்– மார்ச் 31 செவ்வாய் கிழமை, மாலை 3.20

பங்குனி உத்திரம்-ஏப்ரல் 1 புதன்கிழமை

பங்குனி உத்திரம் நிறைவு– ஏப்ரல் 1 மாலை 4.17 pm

பங்குனி உத்திர விரதம்

Source credit – Google

முருகப் பெருமானுக்கு அன்றைய தினம் செவ்வரளி மலர்களால் அலங்காரம் செய்து, பால், பழம், தேன், தினைமாவு அல்லது ஏதாவது இனிப்பு செய்து நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள் மூன்று வேளையும் விரதம் இருந்து,மனதை அலை பாய விடாமல் முருகனை நினைத்து, முருகனின் திருநாமங்களை சொல்லி வழிபட வேண்டும். விரதம் இருக்க இயலாதவர்கள் உணவு அருந்தியே விரதம் இருக்கலாம், முருகன் பெருமானின் சிந்தனையே மேலோங்கி இருக்கவேண்டும், “ ஓம் சரவணபவ “ எனும் நாமத்தை 108 தடவை உச்சரிக்க மனதில் உற்சாகம் பிறக்கும்

பங்குனி உத்திரத்தின் பலன்கள்

Source credit -Google

வாழ்க்கையின் கஷ்டத்தித்தின் விளிம்பிலிருந்து முன்னேறலாம், ‘இறை சக்தி ஒருபோதும் கை விடாது “என்ற நம்பிக்கை மனதில் இருக்க துன்பம் விலகும், மேலும் இந்த நாளில் முருகன் ஆலயங்களில் பங்குனி உத்திரத்தின் சிறப்பு வழிபாடு நடைபெறும், இந்த நாளில் புது தாலி கட்டுவது சிறப்பாகும்,மேலும் பக்தர்கள் மொட்டை அடித்தல், பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல் என சிறப்பு காணிக்கையும் நிறைவேற்ற படுகிறது, குறிப்பாக திருமண வாழ்க்கை சிறக்க, திருமணம் தடை நீங்க பங்குனி உத்திரம் நாள் சிறப்பு வாய்ந்ததாகும்

மேலும் ஆன்மீக செய்திகளை இங்கே பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *