பேசு பொருளாக மாறிய நாகர்கோவில் 2 முக்கிய பிரச்சனைகள்
தற்போது நாகர்கோவில் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய 2 பிரச்சனைகள் மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது
Credits -google,

சபரிவர்மன் கைதி சிறை மரணம்
தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த எத்தன் காட்டை சேர்ந்த சபரிவர்மன் 35 நாகர்கோவில் சிறைசாலையில் அடைக்கப்பட்டர்,இவர் ஜூலை 9,2026 ல் தென் தாமரைகுளம் காவல்துறையினால் கைது செய்யப்பட்டார்,
ஜூலை 13 நாகர்கோவில் கிளை சிறையில் இருந்து, உடல் நல குறைவால் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டவர், ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதனையில் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது
மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் போராட்டம்
தற்போது சபரிவர்மனின் உறவினர்கள்,சிறையில் காவலர்கள் அடித்து கொடுமை படுத்திஇருப்பதாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், இது காவலலர்களால் சிறையில் ஏற்பட்ட மரணம் என்று உறவினர் சாலை மறியல் மற்றும் போராட்டம் நடத்தி நீதி கேட்டுள்ளனர்
ஆனால் போலீஸ் தரப்பிலிருந்து அவர் விசாரணையின் போது உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக இறந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்
மாவட்ட காவல் கண்காணிப்பளர் ஆர் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சபரிவர்மன் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க படும் என்று தெரிவித்துள்ளார்
நாகர்கோவில் காசி வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி, சமூக ஊடகங்கல் பயன்படுத்தி காதலிப்பதாக பழகி அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதை இணையத்தில் பகிர்வதாக மிரட்டி லட்ச கணக்கில் பணம் பறித்துள்ளார்
நாகர்கோவிலை சேர்ந்த காசி என்கிற வாலிபர 2020ம் வருடம் கைது செய்யப்பட்டார், இந்த வழக்கு CB-CID பிரிவுக்கு மாற்றப்பட்டு அவரது இல்லத்தில் மடிக்கனிணிகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரித்தனார், இதில் 400 க்கும் மேற்பட்ட வீடியோக்களும்,1500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்தன
அதை தொடர்ந்து விசாரித்த மகளிர் நீதிமன்றம் 2023 ஆம் ஆண்டில் 1. 10 லட்சம் இழப்பீடும் ஆயுள் தண்டனையும் வழங்கியது இந்த தீர்ப்பை எதிர்த்து காசி தரப்பில் மேல்முறையீடு மனுவை அளித்துள்ளனர்
இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை காசிக்கு வாழ்நாள் சிறையை உறுதி செய்தது,இந்த காசியினால் சுமார் 120 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், காசிக்கு கிடைத்த இந்த தீர்ப்பு பாதிப்படைந்த பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது

