ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறை

வெள்ளிக்கிழமை அருள்தரும் தேவி மந்திரங்கள்

வெள்ளிக்கிழமை என்றாலே மங்களம் நிறைந்து காணப்படும். வெள்ளிதோறும் பெண்கள் வீடுகளில் சுத்தம் செய்து உப்பு வாங்கி வைத்துக் கொள்ள மற்றும் மஞ்சள் வீட்டில் வாசலில் கொட்டாக வைப்பது வழக்கமாக இருக்கின்றது சிலர் வீட்டின் பூஜையறை மற்றும் வாசலில் விளக்கேற்ற வழிபாடு செய்வார்கள். வெள்ளிக்கிழமை நாளில் கோவிலுக்கு சென்று தேவி அருள் பெற்று வருவது சிறப்பு தரும்.

வாழ்வில் மன அமைதி தரும் துர்கா காயத்ரி மந்திரம்

வெள்ளிக்கிழமை நாளில் அன்னை பராசக்தி வழிபாட்டினை ஒவ்வொரு ஊரிலும் அவரவர் முறைப்படி வழிபாடு செய்து மந்திரம் சொல்லி பூஜை செய்வார்கள் அப்போது பயன்படுத்த வேண்டிய காயத்ரி மந்திரம் துர்கையினுடய மந்திரம் நெய் வளக்கேற்றி பாராயணம் செய்யும்போது வீட்டில் சுபிட்சம் அமைதி பாதுகாப்பு மற்றும் இறையருள் பெற்று மன நிம்மதியுடன் வாழலாம்.

ஓம் காத்யாயநாய வித்மஹே
கன்யகுமாரி ச தீமஹி
தன்னோ துர்கி: ப்ரசோதயாத்

தீர்க்காயில் தரும் தேவி காயத்ரி மந்திரம்

தீர்காயில் சுபிட்சம் பெறுவதுடன் வாழ்வில் மங்களத் தன்மையை அதிகரித்து தரும் தேவி அருள் பெற மந்திரம் சொல்லி வருவோம்.

ஓம் தத் புருஷாய வித்மஹே மங்கலத்திற்கு
மஹாதேவ்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

சர்வ மங்கள ஸ்லோகம்

தினசரி சிவ அருள் பெறுவது எவ்வளவு முக்கியமோ அது போலவே வீட்டில் சக்தியின் அருள் பெறுவது மிகவும் முக்கியமானது ஆகும். சக்தி இருந்தால் தான் செயலானது செவ்வனே நடக்கும். ஆகவே அந்த சக்தியை பெற வீட்டில் நடைபெறும் காரியங்கள் சர்வ மங்களமாக நடைபெற தினசரி நாம் சொல்ல வேண்டிய மந்திரம் சர்வமங்கலம் மாங்கல்யே …

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிஸே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *