ஆன்மிகம்வாழ்வியல்

இரண்டு முக்கிய விரதங்களும் ஒரு சேர வரும் நன்னாள் – வைகாசி மாத கார்த்திகை விரதம் மற்றும் மாத சிவராத்திரி

வைகாசி மாத இறுதியில் வரும் மாத சிவராத்திரி மற்றும் கார்த்திகை விரதம் இரண்டுமே சிவபெருமானின் அருளை பெற உதவும் அற்புதமான நாளாகும்,ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மாத சிவராத்திரி கொண்டாடப்படுகிறது ,ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் முருகப்பெருமானுக்குரிய விரத நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமான் மற்றும் முருக பெருமானின் அருளை பெறலாம்

நாள் – ஜூன் 13 சனிக்கிழமை, வைகாசி 30

credits -Google

சிவராத்திரியின் வகைகள்

வருடத்திற்கு 12 சிவராத்திரிகள் வருகின்றன. இவற்றில் 6 சிவராத்திரிகள் தேய்பிறையிலும், 6 சிவ ராத்திரிகள் வளர்பிறையும் வருகின்றன. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என சிவராத்திரி விரதம் ஐந்து வகைகளில் உள்ளது

சூரிய பகவான் ஆரம்பித்த மாதம்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவ ராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும், அதன்படி வைகாசி மாத சிவராத்திரியானது சூரிய பகவானால் தொடங்க பட்டது

சிவராத்திரி வழிபாடு

வைகாசி மாத சிவராத்திரிக்கு சிறப்பான பலன் உண்டு ஏனெனில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியையும் சேர்ந்து வழிபடும்போது நம் குடும்பத்தில் உள்ள சீக்கல் குறையும், அமைதி நிலவும், குடும்பம் ஒற்றுமை வழுப்படும்

அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, தூய ஆடை உடுத்தி சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். நாள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் அல்லது பால், பழம் மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளலாம்

அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று, சிவலிங்கத்திற்குப் பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்

இந்த நாளில் முழு ஈடுபாட்டுடன் விரதம் இருந்தால், அறியாமல் செய்த பாவங்களும் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

இந்தநாளில், சிவ வழிபாடு செய்வதும் பசுக்களுக்கு உணவளிப்பதும் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கார்த்திகை விரதம்

இத்தகைய நன்னாளில் தந்தை மற்றும் மகன் இருவரையும் ஒரு சேர தரிசிக்க ஏற்ற அற்புதமான நாளாக அமைகிறது, முருக பெருமானின் அருளையும் இந்த கார்த்திகை விரதம் கடைபிடித்து பெறலாம்,

அதிகாலையில் எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து முருகனுக்குரிய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்,முருகனின் திருநாமங்களைச் சொல்லி, கந்த சஷ்டி கவசம் அல்லது திருப்புகழ் பாடி வழிபடலாம்.

கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவதால் ஞானம், வீரம், மற்றும் நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை. கார்த்திகை விரதத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் முருகனின் அருள் பரிபூரணமாகக் கிட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *