இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த டெல்லி போராட்டம் – ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு எதிர்த்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர், இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து, ஆதரவு குரல்கள் எழுந்தன, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த டெல்லி போராட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி,கல்வித்துறை அமைச்சரின் பதவியையும் விலக வைத்துள்ளனர்
கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி ஆரம்பம்
ஒரு நையாண்டி அரசியல் மற்றும் சமூக ஊடகமாக முதன் முதலில் மே 16,2026 ல் அபிஜித் தீப்கே மூலம் உருவாக்க பட்டது,ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அரசியல் சம்பந்த நக்கல், நய்யாண்டி தொடங்கி தற்போது இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒரு மாற்றத்தையும், மாணவர்களின் சக்தியையும் ஒருங்கிணைத்து காட்டியுள்ளது,
credits -google

மூன்று கோரிக்கை
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்,
தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்,
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தி வந்தனர்
ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த சோனம் வாங்சுக், கடந்த சனிக்கிழமை போராட்டக்களத்தில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்தே போராட்டம் தீவிரமடைந்தது.
போராட்ட களத்தில் இளைஞர்கள் பட்ட துன்பங்கள் ஏராளம், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு போட்டும் போராட்டத்தை கலைக்க முயற்சித்தனர், பல மாணவர்கள் இதில் காயமடைந்துள்ளனர்,
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்துடன் அரசு பல ஆண்டுகளாக விளையாடி வருகிறது. அந்த ஆவேசம் இப்போது டெல்லி போராட்டத்தின் போது வெளிப்பட்டுள்ளது
credits -google

இறுதியாக ஒன்றிய அரசு இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது,எதிர்ப்பு வலுவாக உள்ளதை உணர்ந்த அரசு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பிரதிநிதிகளைச் சந்திக்க ஒப்புக்கொண்டது
இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
வினாத்தாள் கசிவிற்கு பின் தற்கொலை செய்த நீட் தேர்வாளர்களுக்கு இழப்பீடு வழங்கப் படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
