electionதமிழகம்தேசியம்வாழ்வியல்

மக்கள் தீர்ப்பு -தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாடு 17-ஆவது சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று 234 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது, இந்த தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்க பட்ட நிலையில், கடந்த சட்ட மன்ற தேர்தலை காட்டிலும் 4.83 கோடிக்கும் மேலானோர் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றியுள்ளார்

பிந்தையை கருத்து கணிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு, திமுக, அதிமுக அல்லது தவெக-வில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற மக்கள் முடிவுகள் தெரியவரும். இத்தேர்தல் முடிவுகள் தீவிர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, வாக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன,

அரசியல் வரலாற்றில் புதிய தாக்கம்

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று சில கருத்துக்கணிப்புகளும், அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று சில கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ள நிலையில், விஜய்யும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது தான் தேர்தல் களத்தில் குழப்பத்தை அதிகரித்து இருக்கிறது.

மக்கள் தீர்ப்பு -மே நான்கு

எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தல் களத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களது பங்களிப்பை அதிகமாக செலுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது,சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் திங்கட்கிழமை மே 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் கட்சி எது?? என காணலாம்

தேர்தல் ஆணையம் –

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.இந்த தேர்தலில் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மே 4 திங்கள் கிழமை எண்ணப்பட உள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமே ஆவலோடும், ஆர்வத்துடனும் எதிர்பார்த்திருக்கும் மே 4-ம் தேதியில், வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் வெளிப்படைத்தன்மை

வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிசெய்ய 4,624 நுண் பார்வையாளர்கள் அவர்களுக்கு துணையாக நியமிக்க பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *