சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

குடும்ப வாரிசையே கொலை செய்ய திட்டமிடும் விஜயா – மனோஜிற்காக எந்த எல்லைக்கும் செல்லும் அவலம்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் கொடூரத்தனம் வெளிப்படுகிறது, ரோஹிணி வயிற்றில் உள்ள குழந்தை, மனோஜுடையது என்று விஜயாவிற்கே சந்தேகம் வருகிறது, அந்த குழந்தையை உலகிற்கு வரும் முன்னே அழிக்க நினைக்கிறாள், இதற்கு பார்வதியை துணை கேட்கிறாள் அடுத்து முத்து சீதாவிற்கு அருண் மீதுள்ள பயத்தை போக்க ஒரு வழி செய்கிறார் என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்

ரோகினிக்கு எதிராக சதி செய்யும் விஜயா

விஜயா பார்வதியை வீட்டிற்கு வரவைத்து, யாருக்கும் தெரியாமல் மாடியில் பேசிகொண்டிருக்கிறாள்.

“ரோஹிணி என் மகன் வாழ்க்கைல இருக்க வரைக்கும் அவனுக்கு எதிர்காலமே இருக்காது ” அவள் பணத்திற்கு ஆசை பட்டும், வேற யாரோடைய குழந்தையை மனோஜ் குழந்தைனு சொல்லி பொய் சொல்லிட்டு இருக்கா எப்படியாவது அவளை விரட்டி விடணும் அதுக்கு நீ தான் எனக்கு உதவி பண்ணனும்னு பார்வதியிடம் கேட்டுகிட்டு இருக்காங்க

பார்வதியோ “ரோஹிணி குழந்தை விஷயத்தில் பொய் சொல்லியிருக்க மாட்டாள், மனோஜ் தான் பொய் சொல்கிறார் என கூறிவிட்டு என்ன உதவி வேண்டும் என்று கேட்கிறார்

credits -google

குழந்தையை கலைத்து விடு

விஜயா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், பார்வதியிடம் எனக்கும் மனோஜ் மேல் தான் சந்தேகமாக உள்ளது அதனால தான் சொல்றேன் “ரோகினியை உன் வீட்டுக்கு வரவைத்து ஜூஸ் போட்டு கொடு, அப்படியே அவளுக்கு தெரியாம கரு கலைக்கும் மாத்திரையை கலந்து கொடுத்து விடு, அது இருக்கறவரைக்கும் மனோஜிற்கு டிவோர்ஸ் கொடுக்க மாட்டாள் ” எனக்கு இந்த உதவி மட்டும் செய்து கொடு என்று சொல்லி கொண்டிருக்கிறாள்

நீ ஒரு கேவலமான பிறவி நிரூபித்து விட்டாய்

விஜயா சொல்வதை கேட்டு பார்வதிக்கு கோவம் தாங்க முடியவில்லை, “உன் மகன் வாழ்க்கையை மட்டும் தான் யோசிப்பயா??ரோஹிணி வாழ்க்கை என்னாவது?? “எவ்வளவு கேவலமா கீழ்த்தரமான யோசனை இது, உன் குடும்ப வாரிசை கொல்லறதுக்கு பிளான் பண்ணிக்கிட்டு இருக்க “

உன்னோட தான் இவ்வளோ வருஷம் பிரண்ட்டா இருந்தன்னு நெனச்சாலே கேவலமா இருக்கு எனக்கு, நீ இந்த எண்ணத்தோட என் மூஞ்சிசியிலேயே முழிக்காத?? என் வீட்டு பக்கமே வந்திராதானு?? சொல்லிட்டு கெளம்பிட்டாங்க

ஆனால் விஜயாவிற்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை, மனோஜிடம் இருந்து ரோகினியை பிரிப்பதற்கு எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கிறார் விஜயா

சீதாவிற்கு தற்காப்பு கலை

முத்து சீதாவிற்காக அற்புதமான ஒரு ஐடியாவை சொல்கிறார், சீதாவை கராத்தே கிளாசிற்கு கூட்டி சென்று, தற்காப்பு கலையான கராத்தே பழக சொல்கிறார்,அருண் அடிக்க வந்தால் திருப்பி அடிக்காவது தெரிய வேண்டும், அவனை விட்டு பிரிய மனமில்லை என்றால், அவனை அவன் வழியில் தான் போய் மடக்க வேண்டும் என்று அறிவுரை கூறி வருகிறார்

இனி விஜயா மனோஜை காப்பாற்றவும், மனோஜின் வாழ்க்கையில் இருந்து ரோகினியை பிரிக்க என்ன திட்டம் போடப்போகிறார் என்று நாளைய எபிசோட்டில் பார்க்காலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *