ஏப்ரல்1 முதல் ஏடிஎம் விதிமுறைகள் அமல்
நாளை ஏப்ரல் 1-ல் இருந்து ஏடிஎம் வங்கி கணக்கில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர உள்ளது அதன் விவரங்களை தொடர்ந்து நாம் பார்க்கலாம்.
ஏடிஎம் விதிமுறை
ஏடிஎம் விதிமுறைகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றது. ஏடிஎம் கார்டுகள் வைத்திருப்பவர்கள் இதுவரை ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு மட்டுமே சிறிய தொகை செலுத்தி வந்தனர். ஆனால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பணம் இருப்பு தெரிந்து கொள்ள அதாவது பேலன்ஸ் சரி பார்த்தால் கூட ஒரு சிறிய தொகை செலுத்த வேண்டும். மேலும் மினி ஸ்டேட்மென்ட் எடுக்க வேண்டும் என்றாலும் அதற்காக கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு முன்பு பணம் இல்லாமல் அனைத்து தேவைகளையும் செய்து வந்தோம் .ஆனால் தற்போது மாற்றம் வந்துள்ளது.

ஏடிஎம் விதிமுறைகள் மாற்றம்
ஒரு மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே கட்டணமில்லாமல் ஏடிஎம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இலவச வரம்பு முடிந்த பின்பு பணம் எடுப்பதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. ஏடிஎம் மையங்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்பவர்கள் இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டனர் இது நடுத்தர அளவில் பொருளாதாரத்தில் வாழ்ந்து வருபவர்கள் ஏடிஎம் ஐ பக்குவமுடன் செயல்பட்டு வந்தனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஏடிஎம்மில் மினி ஸ்டேட்மெண்ட் எடுக்க கூட பணம் கட்ட வேண்டும் என்பதால் இன்னும் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
ஏடிஎம் விதிமுறைகளின் பயன்கள்
ஏடிஎம் மெஷின் பயன்பாட்டுக்கு கட்டணம் என்னடா இது என்று குழம்ப வேண்டாம். முதலில் மூன்று முறை மாதத்தில் கட்டணமில்லாமல் ஏடிஎம் மிஷினை பயன்படுத்தினால் தற்போது மினி ஸ்டேட்மெண்ட் என்றாலும் பணம் கொடுக்க வேண்டும் மற்றும் மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தினாலும் பணம் கொடுக்க வேண்டும். பேலன்ஸ் பார்த்தாலும் கட்டணம் இருக்கின்றது. இது கடினமான சூழல் என்று நினைத்தால் கடினம் தான். ஆனால் செலவு செய்வதை இது தடுக்கச் செய்யும் மேலும் எப்படி செலவு செய்கின்றோம்,எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை கொடுக்கும். இது ஒரு வித நன்மையை வழி வகுத்தாலும் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் செலவுக்கு சற்று கடினமான சூழல்தான்.

