கூகுளின் கௌரவம் செவாலியே சிவாஜியின் 93வது பிறந்த தினம்
இன்று அக்டோபர் 1 இந்திய உலகின் ஒரு புதிய சகாப்தம் சிவாஜி கணேசன் அவர்கள் 93 ஆவது பிறந்த தினம் இதனை கௌரவிக்கும் வகையில் கூகுள் தனது டிஸ்ப்ளே சிவாஜி கணேசன் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது
செவாலியே சிவாஜி
சிவாஜி கம்பீர நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு, முகபாவனைகள் , நடை உடை கண் என உடலின் அனைத்து அங்கங்களும் இவரின் சொல் கேட்டு நடிக்கும். இந்திய திரையுலகின் சகாப்தமாக சிவாஜி கணேசன் அவர்கள் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிவாஜி அவர்கள் தமிழ் படங்கள் ஒவ்வொன்றும் முத்து மாலை போல நம்மை ஒவ்வொன்றாக ஒவ்வொரு தனித்தன்மையுடன் நம்மை பார்க்கச் செய்யும்.
மேலும் படிக்க ; வில்லனாக கலக்கிய மக்கள் நடிகர் திகில் மூவியில் எண்ட்ரி
சிவாஜியின் குடும்பமும் ,விருதும்
பிரபு , ராம்குமார் சிவாஜியின் இரு மகன்கள் ஆவார் .சாந்தி ,தேன்மொழி கணேசன் என்ற இரு மகள்கள் இருக்கின்றனர் சிவாஜி சிறந்த நடிகர் மற்றும் தாதா சாஹேப் பால்கே அவார்டு மற்றும் தேசிய விருது பெற்றுள்ளார்.
நடிகர் திலகத்தின் படங்கள்
மேலும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கூறலாம். பி.ஏ பெருமாள் முதலியார் தயாரித்த “பரா சக்தி” என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதனை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து அனைவரின் மனதையும் தனது அசுர நடிப்பால் கட்டிப் போட்டவர்.
நடிகர் திலகம் , சிம்மக்குரலோன் என்ற பெயர்களை பெற்ற இவருக்கு சென்னை மெரினா கடற்கரை சாலையில் இவரின் சிலை நிறுவப்பட்டு உள்ளது.
நம் மனம் கவர்ந்த மன்னனின் பிறந்த தினம் இன்று!!!
மேலும் படிக்க : சிம்பு பரத் பிக் பாஸ் சீஸன் 4 போட்டியாளரா!