ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்தமிழகம்பஞ்சாங்கம்

பல அரிய யோகங்கள்ஒரே நேரத்தில் 300 ஆண்டுகளுக்கு பிறகு மங்களகரமான சேர்க்கை

சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சனிஜெயந்தி ” நாள் மே 16 வைகாசி மாதம் அம்மாவாசை நாளில் உண்டாகியுள்ளது, இந்த நாளில், சச மகாபுருஷ யோகம், கஜகேசரி யோகம் மற்றும் புதாதித்ய யோகம் உள்ளிட்ட ராஜயோகங்கள் ஒரே நேரத்தில் உருவாகின இந்த நாளின் சிறப்பு அம்சங்கள் காணலாம்

சனிஜெயந்தி நாளின் சிறப்பம்சம்

சனி பகவனின் பிறந்த நாளான வைகாசி அம்மாவாசை, 13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வருவது அற்புதமான நிகழ்வாக கருதப்படுகிறது, இந்த நாளில் சனி பகவானை வழிபடுவது சனி தோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகாரமாக அமையும்

இந்த சச மகாபுருஷ யோகம், கஜகேசரி யோகம் மற்றும் புதாதித்ய யோகம் உள்ளிட்ட யோகம் இணைவதால் 12 ராசிகளுக்கும் பலன்கள் கிடைக்கும், இருப்பினும் குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்குதொழில் மற்றும் நிதி ரீதியான பெரிய மாற்றங்கள் உண்டாகும்

மேஷம் ராசியினருக்கு செல்வாக்கு

மேஷம் ராசியினருக்கு இந்த யோகத்தால் நிதி நிலை உயரும், தொழில் வளர்ச்சி தாராளமாக செழிப்புடன் இருக்கும்,புதிய தொழில் தொடங்கினாலும், வெற்றி காணும் காலகட்டமாக அமைகிறது, அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும், கடனாக கொடுத்த பணம் நிலுவையில் உள்ள நிலையில் கைக்கு வந்து சேரும்.புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு உங்களுக்கு நனவாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்கள் நல்ல செய்திகளை பெறுவீர்கள். தடைகள் நீங்கும்

சிம்மம் ராசியினருக்கு வேலை உறுதி

சிம்ம ராசியினருக்கு இந்த மங்களகிரி யோகத்தால் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கும், அரசு தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகள் எழுதி காத்திருப்பவர்களுக்கு, நிச்சயம் வேலை கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும் ஆதரவும் அந்தஸ்தும் கிடைக்கும். சிம்ம ராசியினர் பலரும் சிக்கல்களில் தவிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த காலகட்டமானது சற்று மன நிம்மதியை கொடுக்கும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் எல்லாம் தடையின்றி நடந்து முடியும்

கும்ப ராசியினரின் கடின உழைப்பிற்கு ஊதியம்

கும்ப ராசியினருக்கு இந்த மங்களகரமான சேர்க்கையால், அதிர்ஷ்டத்தை அள்ளித் தர போகிறது மற்றும் நிதிநிலை உயிரும் காலகட்டமாகவும் அமைகிறது. அலுவலகத்தில் இவர்களின் திறமைக்கு ஏற்ற மற்றும் கடின உழைப்பிற்கான ஊதியமும் பாராட்டும் கிடைக்கும், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும், நீண்ட நாட்களாக மனதில் உள்ள குழப்பங்களுக்கும், சங்கடங்களுக்கும் இந்த காலகட்டத்தில் தீர்வு கிடைக்கும்.நிதி ரீதியாக உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். இந்த நாளில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.எதிர்பாராத நிதி ஆதாயங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *