செய்திகள்தமிழகம்தேசியம்வணிகம்

இந்தியாவிற்கு வர போகும் பேராபத்து – எச்சரிக்கும் பிரதமர் மோடி

நெதர்லாந்தில் உள்ள இந்தியர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய எச்சரிக்கை எடுத்துள்ளார், கொரோனா பேரழிவு, உலகப் போர்கள், அந்த வரிசையில் எரிசக்தி தட்டுப்பாடு இது போன்ற பிரச்சனைகளால் இந்திய நாட்டின் ஒரு பகுதியினர் வருமைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகிறது என்று எச்சரித்துள்ளார், இந்த நிலை நீடித்தால் 10 ஆண்டு கால சாதனைகள் துடைத்தறிய படும் என எச்சரித்துள்ளனர்

Credits -Google

மேற்கு ஆசிய போர் தாக்கம் எரிசக்தி தட்டுப்பாடு

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் ஈரான் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மோடி எச்சரித்துள்ளார்.இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அவ்வப்போது மீறப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.இதன் காரணமாக உலகளாவிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது.

இந்தியாவில் எரிபொருள் தயாரிப்பு

இந்தியாவிலேயே எரிபொருளை உற்பத்தி செய்யும் நடவடிக்கையின் தொடக்கமாக இந்தியாவில் பெட்ரோலிய மூலங்களை கண்டுபிடிப்பது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் இலக்கு

இந்த உலகளாவிய நெருக்கடிகளைச் சமாளிக்க இந்தியா மற்றும் நெதர்லாந்து நாடுகள் நம்பகமான மற்றும் வெளிப்படையான விநியோகச் சங்கிலிகளை (Supply Chains) உருவாக்க இணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

பசுமை எரிசக்தி

பசுமை எரிசக்தி உற்​பத்​தியை அதி​கரிக்க பாஜக ஆட்​சி​யில் சிறப்பு கவனம் செலுத்​தப்​படு​கிறது. இந்​தி​யா​வில் அமைக்​கப்​படும் சோலார் பூங்​காக்​கள் உலகின் மிகப் பெரிய சோலார் பூங்காவாக அமைக்க பட்டுள்ளது என்றும் பெருமை பட்டுள்ளார்

எரிசக்தி தட்டுப்பாட்டில் இந்தியா

மத்திய அரசின் தகவலின்படி, உள்நாட்டு நுகர்வோருக்குத் தேவையான எரிசக்தி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது, பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்றாலும் சிலிண்டர் பயன்பாட்டினை கவனத்துடன் கையாள வேண்டும் என்று வலியுறுத்த படுகிறது

மாற்று சக்தி தேவை

மின்சாரம் மற்றும் எரிபொருளைத் தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தித் தேவையற்ற வீணடிப்பைத் தவிர்ப்பதின் மூலம் ஆற்றலை சேமிக்கலாம்,சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் மின்சாரச் சுமையைக் குறைக்க முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *