ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சாய்பாபாவின் அருள் ஆசியுடன் இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்

ஒருமுறை சாய்பாபாவை அன்புடன் நோக்கினால் அவர் ஆயுள் முழுவதும் நம்முடையவர் ஆகிவிடுகிறார். உண்மையான அன்பை தவிர அவர் நம்மிடம் வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை .நாம் கூப்பிடும்போது ஓடி வருகிறார். அந்நேரத்தில் காலமோ, நேரமோ அவருக்கு குறுக்கே நிற்க முடியாது. சதாசர்வகாலமும் அவர் நமக்கு பின்னால் உறுதியாக நிற்கிறார். அவர் எங்கு எவ்வாறு எந்த விசையை இயக்குவார் என்று நமக்கு தெரியாது. அவருடைய செயல்கள் புரிந்து கொள்ள முடியாதவை…

இன்றைய (07-10-2021) நாள் எப்படி இருக்குனு தெரிந்து கொள்ள ஆசையா இதோ உங்களுக்காக உங்களின் ராசிக்கான பலன்கள்!!!

இன்றைய  பஞ்சாங்கம்

07.10.2021* புரட்டாசி 21* வியாழக்கிழமை* பிரதமை திதி பகல் 01.47 வரை பின்புவளர்பிறை துதியை.

நட்சத்திரம் சித்திரை இரவு 09.13 வரை பின்பு சுவாதி.

யோகம் சித்தயோகம்இரவு 09.13 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

சந்திர தரிசனம்.

நவராத்திரி ஆரம்பம்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் –  07.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலைசிறப்பாக இருக்கும்.வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில்உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம்உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும்மரியாதையும் உயரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில்உடனிருப்பவர்களால் தேவையில்லாதபிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்தேவை. தொழிலில்ஓரளவு லாபம் கிட்டும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை காணப்படும். உறவினர்கள்வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர்பயணங்களால் அனுகூலப் பலன்கள்உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்

உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்கள் வேலையில் புதுபொலிவுடனும், உற்சாகத்துடனும்செயல்படுவார்கள். நண்பர்களின்ஆலோசனைகளால் தொழிலில் உள்ளபிரச்சினை குறையும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறுதொகை செலவிட நேரிடும். தொழில்ரீதியான நெருக்கடிகளை சமாளிக்ககூட்டாளிகளை அனுசரித்து செல்லவேண்டியிருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்புகிட்டும்.

கன்னி

உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் சிறப்பானலாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில்தங்கள் திறமைகளை வெளிபடுத்திபாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலைசற்று சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு மனக்கசப்புகள்ஏற்படும். குடும்பத்தில் செலவுகள்அதிகரிக்கும்.வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள்கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்குமகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால்அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ்செல்வாக்கு மேலோங்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியாக பணவரவுதாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளபிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம்உண்டு. வெளியிலிருந்துவரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் வெற்றி பெறஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதுநல்லது. குடும்பத்தில் வரவும் செலவும்சமமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றுஅக்கறை செலுத்துவது நல்லது.

கும்பம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்றஅலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 10.17 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களைதவிர்ப்பது நல்லது.

மீனம்

உங்களின் ராசிக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு காலை 10.17 மணிக்கு மேல்சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும்செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். பெரியதொகைகளை கையாளும் போது நிதானமாகஇருப்பது உத்தமம்.

மேலும் படிக்க : திருவெம்பாவை 25 ஆம் பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *