தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை- திமுக ஆட்சியில் இரண்டு மடங்கு கடன்
தமிழ்நாட்டின் நிதிநிலைமை பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு இன்று ஜூன் 17 , தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவி ஏற்பு விழாவில் சொன்னது போல் இன்று தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார், இதற்கு முந்தைய காலத்திலும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது 2001 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதேபோல் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியிலும் 2021 ஆண்டில் வெள்ளை அறிக்கை வெளியிட்ட வெளியிட்டது, தற்போது தவெக அரசானது வெள்ளை அறிக்கையில் வெளியிட்டபின் இந்த அறிக்கை தொடர்பான 21 பக்கங்கள் கொண்ட விளக்க படத்தை காட்டி அதற்கான விளக்கத்தை அமைச்சர் மரிய வில்சன் வழங்கினார்
தற்போது தமிழகத்தின் நிதி நிலை
- வருவாய் பற்றாக்குறை 78,234 கோடியாக உயர்ந்திருக்கிறது.
- மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலுவை கடன் 28.3% ஆக இருக்கிறது
- 10 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகை
- மொத்த வருவாயில் 22.8% தொகை வட்டிக்காக மட்டுமே செலவிடப்படுகிறது
- அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் 13.8 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை அதிகரிக்கிறது.
- கடந்த திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு,2021-ஆம் ஆண்டில் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் கடன், முந்தைய ஆட்சியின் முடிவில் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது
- வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம் ரூ 78,324 கோடி
- 2021-26-ல் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி,மாநிலத்தின் கஜானா காலியாக இருப்பதாகவும், ஜி.எஸ்.டி.பி (GSDP) விகிதத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) மிகவும் குறைவாக 5.45% மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் ஒருவருக்கான கடன் பொறுப்பு இரட்டிப்பாகி ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 934 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
60 ஆண்டுகளை விட 5 ஆண்டுகளில் அதிகம்
ஐந்து ஆண்டுகாலத்தில் மட்டும் தமிழ்நாடு 4.87 லட்சம் கோடி ரூபாய் புதிய கடனை சேர்த்துள்ளது என்று அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்,”60 ஆண்டுகளில் சேர்த்த மொத்த கடனை விட ஒரே ஐந்து ஆண்டில் சேர்த்த கடன் அதிகமாக உள்ளது என கூறியுள்ளார்
இந்தியாவைவை பொறுத்த வரையில்,கடன் அளவில் குஜராத் 17.6%, மகாராஷ்டிரா 19.7%, கர்நாடகா 23.4%, என்ற அளவில் உள்ளன என்றும், ஆனால் தமிழ்நாடு 28.3% என்ற மிக அதிக அளவை கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
இந்த வெள்ளை அறிக்கையானது,முந்தையை அரசை குற்றம் சாட்டி விமர்சிப்பதற்காக அல்லஎன்றும், இந்த வெள்ளை அறிக்கை மறைமுகத்தன்மையை முடிவுக்கு கொண்டு வந்து மாநிலத்தின் உண்மையான தன்மையை மக்களுக்கும் சட்டமன்றத்திலும் முன்வைக்க வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்

