இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -16.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 16.08.2026
பரபாவ வருடம் ஆடி 31, ஞாயிற்றுக்கிழமை, August 16, 2026 பஞ்சாங்கம் –
திதி : 04:52 PM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி
நட்சத்திரம் : அஸ்தம் 03:50 AM வரை பிறகு சித்திரை
யோகம் : ஸாத்தியம் 04:07 AM வரை, அதன் பின் சுபம்
கரணம் : பத்திரை 04:53 PM வரை பிறகு பவம் 04:51 AM வரை பிறகு பாலவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 01.45 மணி முதல் 02.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 04.30 முதல் 06.00 மணி வரை
எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை
குளிகை: காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் (16.08.2026)
மேஷம் -பொறுமை அவசியம்
ரிஷபம் -பயம் உண்டாகும்
மிதுனம் -ஆதரவு பெருகும்
கடகம் -எதிர்ப்பு அதிகரிக்கும்
சிம்மம் -தடங்கல் உண்டாகும்
கன்னி -ஆதாயம் கிடைக்கும்
துலாம்-சாதனை உண்டாகும்
விருச்சிகம்-பக்தி அதிகரிக்கும்
தனுசு -பரிவு உண்டாகும்
மகரம் -லாபம் பெருகும்
.கும்பம் -மறதி உண்டாகும்
மீனம் -நன்மை உண்டாகும்
உங்களுக்கு தெரியுமா??
உலக அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் சீனாவில் உள்ள சீனப் பெருஞ்சுவர் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புக் கட்டடம் ஆகும். இது கிமு 5 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 16 ஆம் நூற்றாண்டு வரை பல அரசர்களால் கட்டப்பட்டு, நாட்டின் எல்லைகளைக் காக்கப் பயன்பட்டது. 1987 ஆம் ஆண்டு இது உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.மேலும் இதன் மொத்த நீளம் சுமார் 21,196 கிலோமீட்டர் ஆகும்.
1366 முதல் 1644 வரை பல நூற்றாண்டுகளாகப் பல வம்சங்கள் இதனை உருவாக்கின.இதனை விண்வெளியில் இருந்து இதைப் பார்க்க முடியாது என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்ட உண்மையாகும்.

