இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -25.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 25.08.2026
பரபாவ வருடம் ஆவணி 8, செவ்வாய்க்கிழமை, August 25, 2026 பஞ்சாங்கம் –
திதி : 06:21 AM வரை துவாதசி பின்னர் திரயோதசி
நட்சத்திரம் : உத்திராடம் 10:51 PM வரை பிறகு திருவோணம்
யோகம் : ஆயுஷ்மான் 07:40 AM வரை, அதன் பின் சௌபாக்யம்
கரணம் : பாலவம் 06:21 AM வரை பிறகு கௌலவம் 07:13 PM வரை பிறகு சைதுளை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30 மணி வரை
எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (25.08.2026)
மேஷம் -லாபம் உண்டாகும்
ரிஷபம் -நற்செயல் ஏற்படும்
மிதுனம் -போட்டி உண்டாகும்
கடகம் – சலனம் உண்டாகும்
சிம்மம் – கவனம் தேவை
கன்னி -உதவி கிடைக்கும்
துலாம்-நட்பு அதிகரிக்கும்
விருச்சிகம் -உற்சாகம் பிறக்கும்
தனுசு – மன நிறைவு
மகரம் -குடும்பத்தில் நலம்
கும்பம் -தொழில் வெற்றி
மீனம் -குடும்பத்தில் மகிழ்ச்சி
உங்களுக்கு தெரியாத ஆச்சர்யங்கள்
சூரியனில் தொடர்ந்து பலமான வெடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், விண்வெளியில் காற்று இல்லாததால் (வெற்றிடம்) அந்த அசுர ஒலி பூமிக்கு வருவதில்லை. ஒருவேளை ஒலி பயணம் செய்ய காற்று இருந்தால், சூரியனின் சத்தம் 100 டெசிபல் அளவுக்கு (அருகில் அலறும் சைரன் ஒலி போல) எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
நம் கை விரலின் சுண்டு விரல் அடிபடும்போது,கையின் மொத்த பலத்தில் 50% வேலை இழக்கும்
உலகிலேயே மிகப்பெரிய விலங்கான நீலத்திமிங்கலத்தின் இதயம் ஒரு சிறிய கார் அளவிற்கு இருக்கும். இதன் இதயத்துடிப்பு 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்துகூட கேட்கும்!

