ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்- மக்களின் கவனத்திற்கு!!
ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், வங்கிச் சேவைகள் மற்றும் வரிகள் தொடர்பான பல முக்கிய நிதி விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.புதிய எல்பிஜி சிலிண்டர் விலைகள், புதிய யுபிஐ கட்டண விதிகள், பான் கார்டு புதுப்பிப்புகள், ஏடிஎம் கட்டணங்கள் உயர்வு மற்றும் எஃப்டி வட்டி விகிதங்கள் உட்பட பல முக்கிய மாற்றங்கள் செயல்படுத்தப்படலாம். இதற்கிடையில், பல ரயில்களை ரத்து செய்யவும், மாற்றுப் பாதையில் இயக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் பாமர மக்களின் மாத பட்ஜட்டை பாதிக்க அதிகம் வாய்ப்புள்ளது
LPG சிலிண்டர் முதல் ஏடிஎம் வரை புதிய ரூல்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளன இதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்
UPI பணவர்த்தனை விதிகள்
- UPI மோசடியைக் குறைப்பதற்காக NPCI புதிய விதிகளைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
- போலிப் பெயர்களைப் பயன்படுத்தி செய்யப்படும் UPI மோசடியைக் குறைக்கவும் , பணம் செலுத்துவதற்கு முன்பு உண்மையான நபரை அடையாளம் காணவும் வகையில் QR குறியீடு, கைபேசி எண் அல்லது பயனர் குறிப்பிடும் பெயருக்குப் பதிலாக, நீங்கள் பணம் அனுப்பும் நபர் அல்லது வணிகரின் சரிபார்க்கப்பட்ட பெயர் இனி காண்பிக்கப்படும்
LPG சிலிண்டர் விலை உயர்வு
- எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் விலைகளை மறுபரிசீலனை செய்வதால், இப்போது LPG-யின் புதிய விலை ஜூன் 1 முதலே அமலுக்கு வரலாம்
- தற்போது 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.928க்கும் விற்பனை செய்யப்படுகிறது
- தற்போது19 கிலோ கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.3,237.50-க்கும் விற்பனை செய்ய பட்டு வருகிறது
- வீட்டு உபயோக சிலிண்டரில் மாற்றம் இல்லையெனினும் வணிக சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களில் உள்ள மெனுக்களின் விலையும் உயர்ந்துத்துள்ளது
- credits -google

fixed டெபாசிட் வட்டி விகிதம் மாற்றம்
- தனியார் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளில் FD டெபாசிட் செய்பவர்கள் கவனத்திற்கு ஒரு சில சிறப்பு FD டெபாசிட் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம்
- மேலும் FD டெபாசிட் வட்டி விகிதங்கள் மாற்றம் ஏற்படும்
- பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது
பான் கார்டு ரூல்ஸ்
தற்போது புதிய வருமான விதிகளின் படி பான் கார்டு விதிகளில் தளர்ப்பும் சில கட்டுப்பாடு மாற்றம் ஏற்பட்டுள்ளது
- முன்பு 50000 திற்கு மேல் முழுமையாக டெபாசிட் செய்வதற்கு பான் கார்டு அவசியமாக இருந்தது தற்போது அந்த கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது
- சொத்து வாங்குவதற்கும், விற்பதற்கும் பான் கார்டு பயன்படுத்தவதற்கான வரம்பு பத்து லட்சத்திலிருந்து 20 லட்சம் வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது
- 45 லட்சம் வரையிலான சொத்து பரிவர்த்தனைக்கு பரிசு பத்திரம் மற்றும் கூட்டு மேம்பாட்டுஒப்பந்தம் ஆகியவற்றிற்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது
ஏடிஎம் தொடர்பான விதிகள்
- சில வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்கள், இலவசப் பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றங்களைச் செய்யலாம்
- ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளைப் பொறுத்தே வங்கிகள் ஏடிஎம் சேவை கட்டணங்களை மாற்ற வாய்ப்புள்ளது.

