Top Newsசெய்திகள்தமிழகம்

திருச்சி கிழக்கு தொகுதி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி எதிர்க்கட்சியை விளாசிய விஜய்!!வாக்களித்த மக்கள் தற்குறிகளா??

இன்று ஜூன் 1 2026,திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித வளானர் ஜோசப் கல்லூரியில் காலேஜ் மைதானத்தில் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தன்னை வெற்றி வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்கும், தமிழ்நாட்டில் தவெக அரசு ஆட்சி அமைவதற்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மாபெரும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

ஊழல் இல்லாத ஆட்சி அமையும்

ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும், விமான நிலையத்திலிருந்து விழா மேடை வரை, திருந்த வாகனத்தில் ஊர்வலமாக முதலமைச்சர் விஜய் பயணம் மேற்கொண்டார், இதனை கோளாகலமாக தாவேகா தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது

இதில் பேசிய முதலமைச்சர் விஜய் தனக்கு கொடுக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளித்தும் தமிழகத்தில் தவெக அரசின் ஆட்சி ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் ஊழல் இல்லாத ஆட்சி அமையும் எனவும் உறுதி அளித்தார்

அரசியல் எதிரி திமுக தான்

தேர்தலுக்கு முன் சொன்னபடி தமிழ்நாட்டில் TVK வுக்கும் DMK வுக்கும் தான் போட்டி என பேசினார், மு,க ஸ்டாலின் எங்களால்” தவெக அரசு ஆட்சியமைக்க இடையூரக இருக்க மாட்டோம், ஆறு மாதம் அமைதியாக இருப்போம் என எதிர்க்கட்சியினர் கூறினார், ஆனால் 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை

எங்களுக்கு வாக்களித்த மக்களை தற்குறிகள் என்கிறீர்கள், உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள்! எங்களுக்கு ஒட்டு போட்டால் தற்குறி? கேட்டவர்களா?? என்று விமர்சித்துள்ளார்

அந்த தற்குறிகள் தான் 50 ஆண்டு கால மத அரசியலையும், வாரிசு அரசியலையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள்

உங்க ஆட்சியில் என்ன ஆச்சு சட்டம் ஒழுங்கு

மாடல் அரசு’ என்று கூறப்படும் திமுக ஆட்சியில் போதைப் பொருள் கலாச்சாரம் ஒவ்வொரு தெருவிலும் பரவியிருந்ததாகவும், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாததாலேயே பெண்கள் பலரும் தங்களது உயிரை இழக்க நேரிட்டதாகவும் அவர் சாடினார்

திமுகவும் பிற எதிர்க்கட்சிகளும் தங்கள் மீது பழி போடுவதாகவும், மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய செயலை தான் செய்து காட்டுவதாகவும் விஜய் உறுதியளித்தார்

எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக,நீண்ட கால போட்டியாளர்களான இரண்டு அரசியல் கட்சி ” விசித்திரமான கூட்டணி ” அமைத்ததாகவும் குற்றம் சாட்டினர்

மேலும் திமுக ஆட்சியில் மறைமுகமாக பல நல்ல திட்டங்கள் முடக்கபட்டுள்ளன என்றும், டீசல் விலை குறைப்பு,பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு என பல வாக்குறிதிகள் நிறைவேற்ற படாமல் இருப்பதை சுட்டி காட்டினார்

மேலும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தாவேகா சார்பில் ஒரு சாதாரண நம்மில் ஒருவரை அறிவிக்க போவதாகவும் அவருக்கும் முழுமையான ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *