Jallikattu bullsNEWஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறைவாழ்வியல்

சித்திரை கனி காணுதல் – விசுவாவசு வருடத்திற்கு bye bye

சித்திரை 01 ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இனிதே தொடங்குகிறது விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டு தொடங்குகிறது, இந்த தமிழ் பந்தாண்டான சித்திரை நாளில் கனி காணுதல், ஆலயம் சென்று வழிபடுதல் மற்றும் பஞ்சாங்கம் வாசித்தல் போன்றவை இந்த நாளின் முக்கிய சிறப்பாகும்

சித்திரை கனி காணுதல்

பங்குனியின் கடைசி நாளை அதாவது சித்திரை நாள் இருக்கு முந்தைய நாள் இரவில் ஒரு பித்தளை தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் மஞ்சள் கயிறு போன்ற மங்கல பொருட்களும்,முக்கனிகள் ஆன மா பலா வாழை மற்றும் மஞ்சள் பூ கொத்து, தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்கள் மற்றும் பணம் காசு நாணயங்கள், கண்ணாடி அரிசி, பருப்பு, உப்பு, வெல்லம் சக்கரை போன்றவை தட்டில் வைத்து முந்தைய நாள் இரவே தீபம் ஏற்றி வழிபட வேண்டும்

சித்திரை 01 காலை எழுந்ததும், தட்டில் வைத்துள்ள மங்களப் பொருட்களை பார்க்க வேண்டும், இந்த மங்கல பொருட்களை பார்ப்பதன் மூலம் இந்த ஆண்டு முழுவதும் நல்ல செழிப்பினை தரும் என்பது நம்பிக்கை

ஆலயங்களில் பஞ்சாங்கம் வாசிப்பு

தமிழ் புத்தாண்டு சித்திரையில், கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பது சிறப்பு, இதன் மூலம் இந்த ஆண்டு பருவ நிலை, விவசாயம், வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் போன்றவை தெரிந்து கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *