அதிகரிக்கும் வெயிலின் தாக்கம், சூடு பிடிக்கும் பழங்களின் விற்பனை
வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் கடும் வெயிலின் தாக்கமும், இரவு நேரத்தில் புழுக்கத்திலும் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளார், இதனால் வெப்பத்திலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளில் இளநீர், தர்பூசணி, சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் கிர்ணி பழங்களை பலச்சாறாக பருகி வருகின்றன்றனர்

எகிரும் பழங்களின் விலை
- விற்பனை கடைகளில் 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட எலுமிச்சை வெயில் சீசன் காரணமாகவும், பழத்தின் வரத்து குறைந்ததால், 1 கிலோ 180 மற்றும் 200 ரூபாய்க்கு விற்க படுகிறது
- இதேபோல் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் சாத்துக்குடி, தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களின் விற்பனையும் சூடு பிடித்து உள்ளது.
- சாத்துக்குடி – 01 கிலோ 45 ரூபாய் தர்பூசணி – 01 கிலோ 22 ரூபாய் கிர்னி பழம் – 01 கிலோ 25 ரூபாய் விற்பனையாகிறது

