Newsசெய்திகள்தமிழகம்வாழ்க்கை முறைவிழிப்புணர்வு

இனி நாய்களைப் பார்த்து பயந்து ஓட வேண்டாம் -வெறி நாய்களை கருணைக்கொலை செய்ய அனுமதியளித்த உச்சநீதிமன்றம்

தெருநாய்க்கடிச் சம்பவங்களால் நாடு முழுவதும் ஏராளமான சிறாரும் முதியவர்களும் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. பல்வேறு மாநிலங்களிலும் தெரு நாய் கடை தொல்லைகளால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர், 2025 ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் தாமகவே முன்வந்து இது தொடர்பான வழக்கை விசாரித்தது

ஆணை பிறப்பித்த உச்சநீதிமன்றம்

இது தொடர்பாக விளக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை, தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அதே இடத்தில் மீண்டும் விடக்கூடாது என்று கூறியிருந்தது

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் கோரிக்கை

தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டிய இடங்களின் பட்டியல்கல் விரிவுபடுத்தப்பட வேண்டும்

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய ” விழங்கு பிறப்பு கட்டுப்பாடு மையம் ABC Centre செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது

உச்சநீதிமன்ற அதிரடி

விலங்குகள் நல வாரியம் பரிந்துரைப்படி மாநில அரசு முறையாக முக்கியமான தீர்ப்பை எடுத்துள்ளது,மக்களின் உயிரை நாய்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கத் தவறியதற்காக மாநில அரசுகளையும், நிர்வாக அதிகாரிகளையும் நீதிமன்றம் பொறுப்பாக்கியது.

மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை, தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அதே இடத்தில் மீண்டும் விடக்கூடாது

தெரு நாய்​களின் எண்​ணிக்கை அதி​க​மாக இருக்கும் பகு​தி​யில் விலங்​கு​கள் கருத்​தடை மையங்​களை​ அதி​கரிக்க வேண்​டும். அனைத்து அரசு, தனி​யார் மருத்​து​வ​மனை​களி​லும் போது​மான அளவு ரேபிஸ் தடுப்​பூசிகளை வைத்​திருக்க வேண்​டும்.

நாய்க் கடி, அதற்​கான முதலுதவி சிகிச்சை குறித்து பள்​ளி, கல்​லூரி​களின் மாணவ, மாண​வியரிடையே விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்டும்.ரயில் நிலை​யங்​கள், பேருந்து நிலை​யங்​கள், விளை​யாட்டு அரங்கு​கள், மருத்​து​வ​மனை​களில் தெரு நாய்​கள் நுழைவதைத் தடுக்க வேண்​டும்.

வெறிநோய் மற்​றும் குணப்​படுத்த முடி​யாத நோயால் பாதிக்​கப்​பட்ட ஆபத்தான நாய்​களை கருணை கொலை செய்​ய​லாம்.

credits -google

மருத்துவ நிபுணரின் மதிப்பீடு அவசியம்

வெறி பிடித்த, ஆக்ரோஷமான, அப்புறம் படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆக்ரோஷமாக அச்சுறுத்தலாக இருக்கும் தெரு நாய்களை, தகுந்த கால்நடை மருத்துவம் மருத்துவரின் மதிப்பீடு பரிசோதனை செய்த பிறகே சட்டப்படி கருணை கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

இந்த தீர்ப்பானது தெருநாய்களை துன்புறுத்துவதற்கோ அல்லது கொள்வதற்கோ அனுமதி அளிக்கவில்லை, வெறி பிடித்த தெரு நாய்களை மறுத்தவர்களின் மதிப்பீட்டை அறிந்த பிறகு கருணை கொலை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *